ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

ஒருவரிடமிருந்து விலகிவிடுதல் வேறு, வெறுப்பது வேறு. நிறைய பேரிடமிருந்து விலகி விடுவதற்கான காரணங்களுண்டு.

Primya Crosswin

ஒரு புறக்கணிப்பில் தழும்புகள் திறக்க அழுவது எத்தனை சுகமாயுள்ளது.

நேச மித்ரன்

எல்லாம் போதும் என்று தோன்றும் கணத்தில் விஷக்குப்பியைத் தட்டிவிட யாரையேனும் சம்பாதித்திருந்தால் நீங்கள் வாழ்ந்தது வீணல்ல!

ஹேப்பி தாத்தா... ஹேப்பி பர்த்டே தாத்தா!
ஹேப்பி தாத்தா... ஹேப்பி பர்த்டே தாத்தா!

Toshila Umashankar

விவாகரத்துக்குப் பிறகு ஆணாக இருந் தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி self pity அதிகம் இருக்கும், சிறு சிறு ஆறுதல்களை மனம் எதிர்பார்க்கும். அதைப் பெறுவதிலும் தவறு ஒன்று மில்லை. ஆனால், அது மட்டுமே எல் லாமும் என்று நினைத்துவிடாதீர்கள். Vulnerable-லா இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். வாழ்வு தர்றேன், பாதுகாப்பு தர்றேன், பார்த்துக்கிறேன் என்று பலர் வருவார்கள். Naturally rebound-க்கான காலம் என்பதால் சிறு சிறு அக்கறைகூட பெரிதாகத் தெரியும். மண முறிவு ஏற்பட்டதால் எந்த வகையிலும் உங்கள் வாழ்வு அல்லது உங்கள் தரம் குறைந்து விடவில்லை. அதனால் இதுபோன்ற நபர்களிடம் இருந்து விலகி இருங்கள். உங்கள் முழு மனவலி குறையும் வரை, healing நிகழும் வரை துணை தேடாதீர்கள்.

வைரல் போட்டோங்க!
வைரல் போட்டோங்க!

அதேபோல இரண்டாம் திருமணமோ, ஓர் உறவு குறித்து சிந்திக்க வேண்டி இருந்தால் படங்கள் பார்த்து, உங்கள் வாழ்க்கையை சீரமைக்க வந்த ஆபத்பாந்தவன்(ள்) என்று உங்கள் துணையை over romanticize, fantasize பண்ணி எதிர் பார்க் காதீர்கள். அவரும் சராசரி மனிதர்தான். உங்களை மதித்தல், உங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தல், குழந்தைகள் குறித்த புரிதல், ஒட்டுண்ணி போல இல்லாமல் சம்பாதிக்கும் திறன் படைத்தவர்... இதுபோல உங்கள் பிரதான எதிர்பார்ப்புகள் சிலவற்றை மட்டும் ஒப்பிடுங்கள். இவர் இருந் தாலும் சென்றாலும் என் வாழ்வை என்னால் வாழ முடியும் என்று உறுதியாக பயணியுங்கள். ஆனால் காதலிக்க, அவரை மதிக்க, அன்பு செய்ய மறக்காதீர்கள். உங்கள் இருவரின் தேவைகள் குறித்து நிறைய பேசுங்கள். முன் வாழ்வில் கிடைக்காத அத்தனையையும் அந்த ஒரே நபரிடம் எதிர்ப்பார்த்து ஏமாந்து போகா தீர்கள். சினிமாக்களில் காதல், காபி அதோடு முடித்துவிடுவார்கள். வாடகை முதற்கொண்டு படிப்பு செலவு எனக் குடும்பம் குறித்த நிறைய விஷயங்கள் உள்ளன. அதனால் நல்ல இடை வெளி எடுத்துக்கொண்டு பிறகு யோசியுங்கள்.

தனியாக இருக்கும்போது உடல்நலம் பேண நேரம் அதிகமிருக்கும். ஆதலால் உங்களை வார்த்தெடுங்கள். உங்களை அதிகம் நேசியுங்கள், நீங்கள் முதலில், உங்களை மதிக்கத்தக்க நபர் என்று நம்புங்கள்.

8-ம் ஆண்டு திருமணநாள்...
8-ம் ஆண்டு திருமணநாள்...

Lakshmi Saravanakumar

ஒருவரிடமிருந்து விலகிவிடுதல் வேறு, வெறுப்பது வேறு. நிறைய பேரிடமிருந்து விலகி விடுவதற்கான காரணங்களுண்டு. அப்படி விலகியிருத்தலை வெறுப்பதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. உண்மை யில் யாரையும் வெறுப்பதற்கான அவகாசம் இந்தக் குறுகிய வாழ்வில் எனக்கில்லை.

ச ப் பா ணி

ஞாயிற்றுக்கிழமை இறந்தால்தான் நல்ல சாவுனு ஊரே நினைக்கிறாங்க.

சௌம்யா

சரியான கருத்துகளைச் சொல்றதில் முக்கிய மானது... சரியான சொற்களைத் தேர்ந்தெடுக் கறது.