ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
News
லைக் கமென்ட் ஷேர்

தரையோடு முகம்வைத்து படுத்துக்கொண்டே, வாசித்த ஏதோ வொன்றை மனதுக்குள் நினைத்து, நினைத்து வாயோரம் எச்சில்வழிய தூங்கி விடுகின்ற மதியம்.

Karthik

மறைந்த அண்ணனின் சின்ன மகனை சலூனுக்கு அழைத்து வரும் சித்தப்பனின் கைகளில் குடியிருக் கிறது, இந்த உலகம் சமநிலையோடு அச்சுப்பிசகாமல் சுற்றும் ரகசியம்.

Ramanujam Govindan

மனதிற்குப் பிடித்தமானவற்றைக் கண்கள் பார்க்கும்போது உணர் வதைத்தான் அழகு என்று அழைக் கிறோம்.

மெர்ரி கிறிஸ்மஸ்!
மெர்ரி கிறிஸ்மஸ்!

Primya Crosswin

எதற்கு இத்தனை பூத்துக்கொண்டு என்று நினைக்கும்போதுதான் ஒரு குழந்தையின் கரம் கிளை வளைக் கின்றது.

Mayilan G Chinnappan

திருச்சியில் கிட்டத்தட்ட எல்லா தெருக்களிலும் median சுவரை யொட்டி ஐம்பதடி இடைவெளியில் தினமும் குழி வெட்டுகிறார்கள். விசாரித்ததில் soil test என தகவல் கிடைத்தது. இணைப்புப் பாலங்கள் உருவாக்கும் பணி என்கிறார்கள்; ஸ்மார்ட்சிட்டி என்கிறார்கள். வீட்டிற்கு வந்து வண்டியில் எல்லா ஸ்பேரும் ஒழுங்காக இருக்கிறதா வெனப் பார்க்கும்போது, அந்த ‘ஸ்மார்ட்’ என்ற வார்த்தைதான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. பீட்டி பார்லர் போயி பட்டி டிங்கரிங் பார்க்க கூப்பிடும் மயில்சாமியிடம் ‘இதுக்கு மேலயும் அழகு வேணுமா’ என கேட்கும் தலைவனின் வசனம்தான்.

பேபி இஸ் பேக்!
பேபி இஸ் பேக்!

பா. திருச்செந்தாழை

முன்பு ஒரு மதியம் இருந்தது.

தரையோடு முகம்வைத்து படுத்துக்கொண்டே, வாசித்த ஏதோ வொன்றை மனதுக்குள் நினைத்து, நினைத்து வாயோரம் எச்சில்வழிய தூங்கி விடுகின்ற மதியம். பாதங்கள்வரை, இன்னும் சொல்லப்போனால் இடுப்புவரை வெயில் ஒரு அலைபோல அடித்து ஓய்வதை அறியாமல் உறங்குகின்ற அந்த தூக்கம்முடிந்து எழும்போது, அதிகாலையோ என லேசான இனிய குழப்பமும் நிகழ்கின்ற மதியம் அது. அதுவரை தன்னை யாரும் தேடாத அனாதை துக்கமும் சேர்ந்துகொள்ள, மெல்ல எழுந்து சாயங்கால வாசல் தெளிக் கின்ற புழுதிவாசனையை நுகர்ந்தபடி, எதிர்ப்படுகின்ற முதல் முகம்.

“ஏலே, கிறுக்குப்பயலே உங்கம்மா தேடிக்கிட்டே கிடந்தா... எங்க ஒழிஞ்ச நீ.. போ, முதுகுத்தோலை உறிக்கப்போறா” என்றபடி கையிலிருக்கும் வாளித்தண்ணீரை கடைசியாக மண்ணுக்குத் தெளிக்கும் ஈர புடவையின் முக உரசலை ச்சிலீர் என முகத்தில் வாங்கிக்கொண்டு வீடு நோக்கி ஓடும்போது, எங்கெங்கோ தேடி ஓய்ந்து, கோபத்திலிருந்து பரிதவிப்புக்கு மாறி விட்ட அம்மா சிறிய திட்டுகளோடு கையை விரித்தபடி வருகின்ற ஒரு சாயங்காலமும் இருந்தது.

அப்பா மெஸ்ஸி!
அப்பா மெஸ்ஸி!

Rajesh Kumar

காவல் துறையில் துப்பறியும் நாய்களுக்கு எப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது?

ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன், லெப்ரா, ரெட்சிவர் வகை நாய்களைத்தான் துப்பறியும் துறைக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். குட்டிக்கு நான்கு மாதம் முடிந்ததும் பயிற்சியை ஆரம்பித்து விடுவார்கள். முதல் பயிற்சி ஹீல் வாக்கிங் Heal walking என்பதாகும். நாய்க்குட்டியை இடது பக்கமாக கயிற்றைப் பிடித்த படி கூட்டி போவதுதான், இந்தப் பயிற்சியின் நோக்கம். எதிரே வேறு ஏதாவது ஒரு அந்நிய நாய் எதிர்ப்பட்டாலும்கூட அதை பார்த்து குரைக்காமல் சட்டை செய்யாமல் போக வேண்டும்.

அதேபோல் பயிற்சியாளர் நடக்கும் வேகத்துக்கு சமமாய் நாயும் நடக்க வேண்டும். இந்த ஹீல் வாக்கிங் பயிற்சி முடிந்ததும் இரண்டாவது பயிற்சி பார்க்கிங் Barking. `பார்க்கிங்' என்றால் குரைப்பது. எல்லா நாய்களும் குரைக்கக் கூடியதுதான். ஆனால் பயிற்சியாளர் `ஸ்பீக்' (speak) என்று சொன்னால் மட்டுமே குரைக்க வேண்டும். அவர் `கொய்ட்' (quite) சொல்கிற அதே வினாடி குரைப்பதை நிறுத்த வேண்டும்.

இவை தவிர இன்னும் சில உத்தரவு வார்த்தைகள் உண்டு. `சிட்' (sit), `கெட் அப்' (get up), `ஃப்ளாட்' (flat), `டவுன்' (down), `ரெஸ்ட்' (rest), `ட்ராப்' (drop)... இந்த வார்த்தைகளுக்கான பயிற்சிகளை எல்லாம் நாய்க்குட்டிகள் ஒரு மாத இடைவெளியில் கற்றுக்கொண்டுவிடும். முக்கியமான மோப்ப சக்தி பயிற்சி பிரத்யேகமாக கொடுக்கப்படும்.

தனது ஏழாவது வயதில் அல்லது எட்டாவது வயதில் துப்பறியும் நாய்கள் ஓய்வு பெறுகின்றன.பென்ஷன் மட்டும் கிடையாது

PC:
விக்னேஷ் சிவன்...
PC: விக்னேஷ் சிவன்...

மாஸ்டர் பீஸ்

தனக்கு பயன்பட்ட வரை அது உண்மையான அன்பு!

தனக்கு இனி பயன்படப்போவதில்லை எனும்போது அது போலியான அன்பு அவ்வளவு தான்... அன்பின் வரையறை!

கோழியின் கிறுக்கல்!!

அவசரத்துக்கு மற்றவரிடம் பணம் கேட்க ஏற்படும் தயக்கமே...

இங்கு பல பேரை கடனாளி ஆக்காமல் காத்துக்கொண்டிருக்கிறது!

நர்சிம்

வாழ்ந்த வீட்டை

இடிக்க இயந்திரத்தை

அழைத்துவந்த மகனிடம்

எங்கிருந்து ஆரம்பித்தால்

எளிதாக இருக்கும் என

சொல்லும் தகப்பனின்

கண்களைப் போலொரு

காலக்கனிவு!