லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

கேட்டுப் பெறும் மன்னிப்புகள் மனதை லேசாக்கும்! கேட்காமல் பெறும் மன்னிப்புகள் மனதை கனமாக்கும்!

ரம்யா அருண் ராயன்

பல ஆண்டுகளாய்

நாசியில் ஒன்றும்

செவிமடல்களில் இரண்டும்

வேப்பங்குச்சி குத்தியவளாய்

திரிகிற ஒருத்தியை

இன்றும் பார்த்தேன்...

தூர்ந்துவிடாமல்

கசப்பு வாசனையுடன்

வைத்திருக்கிறாள்...

என்றாவது பொன் அணிவோம்

என்கிற நம்பிக்கையை!

shreyaghoshalandshiladitya: ல ல லா குடும்பம்!
shreyaghoshalandshiladitya: ல ல லா குடும்பம்!

Ram Vasanth

அம்மா இறந்த அடுத்த நாளன்று

எல்லோரும் அந்நியமாகத் தெரிந்தார்கள்.

எனக்குப் பசிக்கிறதென

யாரிடம் சொல்வது?

அம்மா இறந்த அடுத்த நாளன்று

என் தம்ளரில் யாரோ தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

அம்மா இறந்த அடுத்த நாளன்று

என் தலையணையில்

யாரோ உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அம்மா இறந்த அடுத்த நாளன்று

எனதென்று ஏதுமில்லை.

அம்மா இறத்த அடுத்த நாளன்று

அழுவதற்கு நிறைய இருந்தன.

ஆனால் யாரிடம் அழுவது?

மாலையில்

மொட்டைமாடியில் தஞ்சமானேன்.

அம்மா இறந்த அடுத்த நாளன்றுதான்

நான் நிலாவைப் பார்த்தேன்.

யாரோ சமைத்துக் கொண்டிருந்தார்கள்

ஐந்தறைப் பெட்டி திறக்க மறுத்தது.

யாரோ விளக்கேற்றினார்கள்

மங்கலாய்க் குறுகிக்கொண்டது சுடர்.

யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்

அம்மாவின் மொழி யாரிடமுமில்லை.

அர்த்தமற்ற நாளை

மேலும் புரிந்துகொள்வதை தவிர்த்துவிட்டு,

வெளியே போய்வரலாமென

சக்தி திரட்டியெடுத்து

ஒரு சட்டை அணிந்தேன்.

புறப்படுகையில்

திரும்பிப் பார்த்தேன்.

நீர் நீட்டிய கையில்லை.

அடுத்த அடி வைக்க பலமில்லை.

வாசலில் அமர்ந்தேன்.

ஆகப் போறதைப் பாரு.

யாரோ சொல்லிச் சென்றார்கள்.

அம்மா இல்லாதவனுக்கு

இவ்வுலகில் வாழ அனுமதி இருக்கிறது.

எதையும் தேர்வுதான் செய்ய முடியாது.

presidentofindia: முர்முவும் மூவர்ணக்கொடியும்!
presidentofindia: முர்முவும் மூவர்ணக்கொடியும்!

Primya Crosswin

நொறுங்கிக்கிடக்கும் போதெல்லாம்

உன்னிடமிருந்து என்னை

தூரமாகவே நிறுத்திக்கொள்வேன்...

அள்ளிக்கட்டிக்கொண்டு

என்னிலும் அதிகமாய்

கீறல் வாங்கிக் கொள்வாய்!

Avudaiappan S

நாம் ஒருவரை பற்றி முழு உண்மையும் நமக்குத் தெரியும் என நினைக்கிறோம். ஆனால் அந்த உண்மைகள் அனைத்தும் அந்த ஒருவர் அனுமதித்த எல்லை வரை மட்டுமே என்பதை ஏனோ மறந்துவிடுகிறோம்.

actress_ramyapandian: மம்முக்கா நேரத்து மயக்கம்!
actress_ramyapandian: மம்முக்கா நேரத்து மயக்கம்!

Latha

‘பரவாயில்லை’ என்பது பரவாயில்லை இல்லை!

என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ஆம்... அது கெட்ட பழக்கம்தான். எதோ ஒரு வேளையில் நட்புக்குரியவர்கள் போன் செய்வ தாகவோ, நேரில் சந்திப்பதாகவோ கூறியிருப் பார்கள். நான் இருக்கும் வேலையையெல்லாம் அதற்காக முன்னமே செய்து முடித்தோ, தள்ளிவைத்தோ, காத்திருந்து காத்திருந்து கடைசியில் அவர்கள் கூறிய நேரம் கடந்து, போன் வரப்போகிறதா இல்லையா, சந்திக்கப் போகிறோமா இல்லையா என்ற சந்தேகம் வரும்போது ஒரு செய்தி அனுப்பிய பிறகு, அவர்கள் மிகவும் சாதாரணமாக போன் செய்ய இயலாததற்கோ, வராமல் இருப்பதற்கோ ஒரு காரணம் சொல்வார்கள். அது உப்புச்சப்பில்லாத காரணமாகவும் இருக்கலாம், உண்மையான காரணமாகவும் இருக்கலாம். சொல்லிவிட்டு, நாம்தான் ஆங்கிலத்தில் சுலபமாக தப்பிக்க ஒரு வார்த்தை வைத்திருக்கிறோமே Sorry என்று, அதையும் சேர்த்துச் சொல்லிவிட்டால் போதும். நான் நல்லவள், புரிந்துணர்வு உள்ளவள் என்று எனக்கு நானே ஒரு பிம்பம் வடித்து வைத்திருக் கிறேன் அல்லவா? உடனே, `அதனாலென்ன பரவாயில்லை, புரிகிறது’ என்று சொல்லி விடுவேன்.

இந்தப் ‘பரவாயில்லை’ எனும் வார்த்தை பல நேரங்களில் பரவாயில்லை இல்லை என்பதே உண்மை. இன்றிருக்கும் டெக்னாலஜியில் ஒரு வினாடி போதுமானது அவர்கள் நம்மை, நம் நேரத்தை மதிப்பவர்களாக இருப்பின் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு சில நேரம் முன்னதாக நமக்கு இன்று பேச/சந்திக்க முடியாத ஒரு சூழலில் இருக்கிறேன் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்ப. ஆனால், அதைக்கூட செய்யாமல் இருப்பவர்களிடம் நாம் ’பரவாயில்லை’ எனச் சொல்வது, ’நீ போன் செய்யாததிற்கு/வராததற்கு பரவாயில்லை’ என்பதை விட, ’என்னை நீ ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாததற்கு பரவாயில்லை’ என்ற உத்திரவாதம் அளிப்பதே. Its OK if you take me for granted என்பதே. முதல்முறை இப்படி நடக்கும்போதே தெளி வாக, ’நீ வராதது பரவாயில்லை. ஆனால் நீயாக முன் னெடுத்து அதை நீ என்னிடம் தெரிவிக்காதது எனக்கு பரவாயில்லை இல்லை (that’s not OK)’ என்பதை சொல்லிவிடுவதே சரி. அதையும் தாண்டி மீண்டும் இதே போல் அவர்கள் நடந்து கொண்டால் அந்த நிமிடமே நாம் புரிந்து கொண்டுவிடலாம் அவர்களை.

ஆனால் நம் மனதிற்கோ, அவர்கள் பார்வையிலோ நாம் புரிந்துணர்வு கொண்டவர்களாக காட்சியளிக்க வேண்டி சொல்லும் ஒரு ’பரவாயில்லை’, இவர்கள் நாம் எப்படி நடந்து கொண்டாலும், எத்தனை முறை இப்படியே நடந்துகொண்டாலும் எப்படியும் நம்மை விட்டு அகல மாட்டார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்து, நம்மை பொருட்படுத்தாமல் இருக்கும் பழக்கத்தையே ஏற்படுத்திவிடுகிறோம். ஒரு நான்கு, ஐந்து முறை இப்படி நடந்த பிறகு, நாம் திடீரென விழித்துக்கொண்டு ’இது எனக்கு பரவாயில்லை இல்லை, you cannot take me for granted’ என்று சொல்லும்போது அவர்கள் நம்மை விசித்திரமாக பார்ப் பார்கள். நாம் arrogant ஆக, திமிராக இருப்பது போல் ஒரு தோற்றமளிப்போம் அவர்களுக்கு. அவர்களுக்கு புரியக்கூட புரியாது. நாம் Not OK என்ற பொழுது களிலும் that’s OK என்று சொல்லி சொல்லியே அவர்கள் நினைக்கும்போது நம் நேரத்தை அபகரித்துக் கொள்ளலாம், காக்கவைத்தோ, சந்தித்தோ என்று நாம் நம்மையே ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பதற் கான எண்ணத்தை அவர்களிடம் விதைத்துவிடுகிறோம்.

எந்த உறவிலும் ஒரு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அது நட்போ, காதலோ, இல்லை வேறு உறவோ, அந்தப் பொறுப்பை ஏற்க துணிவில்லாதவர்கள், அவற்றை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நலம். அப்படி ஏற்க இயலாதவர்களை புரிந்துணர்வு கொண்டு நாம் விலகிவிடுதல் நமக்கும் நலம். நேரம் என்பது அனைவருக்கும் பொதுதான் இங்கு. அவர்கள் நேரமின்மையில் நம் நேரத்தை வீணாக்க இங்கு யாருக்கும் உரிமை கிடையாது. அந்த உரிமையை நாம் கொடுத்தோமானால், ‘மவராசா, தோ நான் இங்க வெட்டியாதான் கிடக்கேன், வேணுங்கும்போது வந்து எடுத்துக்க, வேணாங்கும்போது தூக்கிப் போட்டு போ. நானெல்லாம் ஒரு தூசு உனக்கு முன்னால’ என்று சொல்வது போல்தான்.

anits1103: ஃப்ரெண்ட்ஸ்!
anits1103: ஃப்ரெண்ட்ஸ்!

Sowmya Ragavan

மரணத் தகவல்களை எந்த அதிர்ச்சியுமின்றி கேட்டுக்கொள்ள முடிகிறபோது ஓரளவு வாழ்வு புரிந்து விடுகிறது.

Selva Bharathi

வேலைகளும், பொறுப்புகளும் அதிகமாக இருக்கிறதா? நீங்கள் முக்கியமானவர் என்று அர்த்தம்.

{m}

நான் ஒருத்தருக்கு ஒரு விஷயத்தை செய்யறதுக்கு முன்னாடி அதையே எனக்கு வேற யாராச்சும் செஞ்சா எப்டி வலிக்கும்னு யோசிச்சு, அதை நான் மத்தவங் களுக்கு செய்யாம என்னை ஒழுங்குபடுத்திக்கிறது is அறம். அதுவே... நல்லது செஞ்சு சந்தோஷப்படுத்திவிட யோசிக்கவே தேவையில்ல. அவ்ளோதான்.

மாஸ்டர் பீஸ்

கேட்டுப் பெறும் மன்னிப்புகள் மனதை லேசாக்கும்! கேட்காமல் பெறும் மன்னிப்புகள் மனதை கனமாக்கும்!