
ஒரு தலைவரைவிட அவரின் கொள்கைகளை அறிமுகப்படுத்தாமல், வெற்றுக் கொண்டாட்ட ஓலங்கள்தான் கேட்க முடிகிறது.
primyarayee
இறுதியாய் இந்த மழையால் என்ன செய்து விட முடிந்தது?!
அழைக்காமலும் அழிக்காமலும் இருக்கிற ஒரு அலைபேசி எண்ணை தொடுதிரையில் வெறிக்கச் செய்தது தவிர…
imkayalsai
மீ: நான்லாம் ட்விட்டர்ல எவ்ளோ பெரிய பிரபலம் தெரியுமா... என்னைய இப்படி கடை கடையா இழுத்துட்டு அலைய விடுறியே, தாயா நீ...
அம்மா: என்னது பிரபலமா... சரி, அப்ப போய் பில் கவுன்ட்டர்ல இன்னொரு கட்ட பை கேட்டு வாங்கிட்டு வா.

kashyap.hansa
முன்பெல்லாம் தலைவர்கள் பற்றி பேச்சு, கட்டுரைப்போட்டி வைப்பார்கள். பல மாணவர்களுக்கும் காந்தியோ, விவேகானந்தரோ, ரமணரோ பற்றி அந்த போட்டிகளாலேயே அறிய முடிந்தது.
இப்போது அப்படி எல்லாம போட்டிகள் வைப்பதில்லையா? அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இவற்றுக்கு இல்லைபோல தெரிகிறது.
ஒரு தலைவரைவிட அவரின் கொள்கைகளை அறிமுகப்படுத்தாமல், வெற்றுக் கொண்டாட்ட ஓலங்கள்தான் கேட்க முடிகிறது.
shobana.narayanan.12
ஸ்கூல் தொறந்துட்டாங்க... பசங்க ரெண்டும் கட்டுச்சோத்தைக் கட்டிக்கிட்டு கிளம்பிடுச்சுக...
மிஸ்ஸ நினைச்சாத்தான் பாவமா இருக்குது.
பத்து நிமிசத்துக்கு மேல இதுகளால உக்கார முடியாது... டபக்குனு கொடைசாஞ்சிருங்க.
அரமணிக்கொருக்கா வாய்ல அரவை போடணும்...
என்னத்த பண்ணி பஞ்சாயத்த கூட்ட போகுதுகளோ..
முருகா...
pon.vimala
எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் கண்மூடித்தனமாக நம்ப வைத்து காணாமல் செய்கிற கயமைத்தனத்துக்கு ‘அன்பு’ என்றொரு அழகிய பெயர் உண்டு!

@anand17m
குப்பையைக்கூட ஒழுங்காக குப்பைத் தொட்டியில் போட பொறுப்பில்லாத இந்தச் சமூகத்தில் இருந்து கொண்டுதான் பல பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
@TheRaavanaa
உண்மையைச் சொன்னால் கவலையோடு இருப்பதை நான் ரசிக்கத் தொடங்கிவிட்டேன். அது என் ஆறாம் விரலாகவோ, மூக்கின் இடப்புற பருவாகவோ என்னோடு ஒன்றாகிவிட்டது. ஒருபோதும் இதற்கு நான் அவர்களிடம் ஆறுதல் தேடப்போவதில்லை. பாரபட்சமற்ற இவ்வாழ்வில் எனக்கு ஆறுதல் சொல்லு மளவு அவர்களும் நிம்மதியாய் இருப்பதில்லை.
@narsimp
கிச்சன்ல இருந்து வாசம் வருதானு பாக்க டிவிய மியூட் பண்றதுல்லாம் ஜகஜமான வியாதிதான.
@teakkadai1
இந்திய அளவில் தரமான பொருள்னு சொல்லி இப்ப எதையும் விக்க முடியலை. உலகத்தரம்னு போனாத்தான் திரும்பியாவது பார்க்கிறாங்க.
athisha
காலம் செல்லச் செல்ல கோபம் குறையக்கூடியது அல்லது வெளிப்படுத்திய பின் அது தன் இயல்பை இழந்து நம்மை விடுவிக்கவும் வல்லது. ஆனால், வன்மம் பெருகக்கூடியது. அது காத்திருக்கும். காலம் முழுக்க எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அது விஷத்தைக் கக்கிக்கொண்டே இருக்கும். வன்மம் கொடியது.
aashni.ravi
மனைவி: என்னங்க போன் அடிக்குது எடுக்கல.
நான்: சேகர்தான் கூப்பிடறான் அப்றமேட்டு பேசிக்கறேன்.
மனைவி: மாமா இப்ப என் போனுக்கு கூப்பிடறாரு.
நான்: எடுக்காத எடுக்காத.
மம்மி : டேய் என் போனு அடிக்குது அவனான்னு பாரு.
நான்: அய்யையோ ஏன் இப்டி மாறி மாறி கூப்பிடறான். கார் எதும் கேப்பானோ மழைக்கு நாற வச்சிருவானே. யாரும் எடுக்காதிங்க.
காலிங்பெல் கிர்கிர் : அய்யையோ இங்கியே வந்துட்டான் போல... யாருன்னு பாரு.
மனைவி: நம்ம சோமு அண்ணன்தான் வந்திருக்காரு.
நான்: வாங்க மாமா என்ன இப்டி மழைல நனைஞ்சிட்டு வந்திருக்கிங்க குடை எடுத்துட்டு வரலாம்ல.
அங்கிள்: அட பக்கத்துலதானேன்னு வந்தேன் நனைஞ்சிட்டேன். சரி, சேகரு ஏதோ அர்ஜன்ட்டா பேசணுமாம் உனக்கு கூப்பிட்டா எடுக்கலையாம். இந்தா லைன்லதான் இருக்கான் பேசு.
நான்: சொல்லுடா.
சேகர்: என்ன மாப்ள யாரும் போனையே எடுக்க மாட்டிக்கிறிங்க.
நான்: அது அது வந்து எல்லாரும் தூங்கிட்டோம். சரி சொல்லு என்ன விசயம்?
சேகர்: இல்ல அந்தாக்ஷரி விளையாடிட்டு இருக்கோம். `ஊ'ல தொடங்கற மாதிரி ஒரு பாட்டு சொல்லு பாப்போம்.
நான்: இரு இங்க எல்லாம் இருக்காங்க நான் மாடிக்கு போயிட்டு என் போன்ல இருந்து கூப்பிடறேன்.