
சில மீன்களுக்கு தொட்டி தரும் பாதுகாப்பு பிடிக்கும்... சிலதுக்கு குளத்தில் குதிக்க...சிலதுக்கு ஆற்றில் எதிர்நீச்சல் போட கனவு
revathy.ravikanth
கணவர்: நாளைக்கு ஒரு Couple லன்ச்சுக்கு வர்றாங்க இன்வைட் பண்ணியிருக்கேன், நம்ம வீட்டுக்கு.
நான்: சரி... சிக்கன் மட்டன்னு ஏதாச்சும் செய்றேன். ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸும் வாங்கணும்.
கணவர்: அவங்க வெஜிடேரியன்.
நான்: வெஜ்ல எனக்கு வெரைட்டியா செய்யத் தெரியாது.
கணவர்: நான்வெஜ்ல மட்டும் தெரியுமா!?
நான்: இந்தாப்பா. நாமெல்லாம் விருந்துக்கு போற குரூப். விருந்து போடுற குரூப் இல்ல...யாராருக்கு என்ன வருமோ அதை செய்ங் களேண்டா!
Kanmani.Pandiyan
நம்ம வீட்டு ஃபிரிட்ஜாவே இருந்தாலும் அதுக்குள்ள என்ன இருக்குன்னு நல்லா தெரிஞ்சிருந்தாலும், ஒரு நாளைக்கு 40 வாட்டி திறந்து பார்ப்பது என்ன டிசைனோ!
அது மூடியே இருக்கறதாலதான் இந்த டெம்ப்டேஷன்... அதுக்கு மட்டும் ‘see through door’ வடிவமைச்சிருந்தான்னா இந்த பிரச்னை வந்து இருக்குமா?!

geetha.ganesan.967
அம்மா: இவ்ளோ பழசா இருக்கு, இந்த டீசர்ட்ட எதுக்கு போட்ற?
அப்படி சொன்னா, இது டீசர்ட் கரித்துணி ஆவதற்கான அறிகுறி.
rkannan.kannan.568
எத்தனை முறை விழுந்தாலும் பிரபஞ்சம் தூக்கி விட்டுவிடுகிறது.
நானும் விழுவதை விடுவதாக இல்லை,
பிரபஞ்சமும் தூக்கி விடுவதை நிறுத்துவதாக இல்லை.
suresh.kannan.1806
குடியிருப்பு நலச் சங்கக் கூட்டத்தின் சந்திப்பில் சளசளவென்று சத்தம் எழுந்து கொண்டே இருந்தால், சட்டென்று அங்கு அமைதியை ஏற்படுத்த ஓர் எளிய வழி இருக்கிறது... `அடுத்த செகரட்ரி போஸ்ட்டை யார் எடுக்கப்போறீங்க?'
revathy.ravikanth
டின்னர் என்ன!?
ரெண்டு ஆப்ஷன்யா...
ம்ம்... ok...
ஆப்ஷன் 1 - உப்புமா!
ஆப்ஷன் 2 - ஆப்ஷன் ஒண்ணு!

kundhaani
சில மீன்களுக்கு தொட்டி தரும் பாதுகாப்பு பிடிக்கும்... சிலதுக்கு குளத்தில் குதிக்க...சிலதுக்கு ஆற்றில் எதிர்நீச்சல் போட கனவு... சிலதுக்கு கடலின் ஆழத்தைக் காண...
பெண் எப்போதிலிருந்து சுதந்திரமாகிறாள்?
தான் எவ்வகை என்று அறிந்ததிலிருந்து!
kundhaani
இந்த Pedicure / Manicure-க்கு ஏதாச்சும் புது பார்லருக்கு போனோம்னா…
முதல் பாதி நேரம் நம்ம கிட்ட அன்யோன்யமா பேசுவாங்க…
உதா: எங்க இருக்கீங்க? எங்க வேல பாக் கறீங்க? கல்யாணம் ஆகிடுச்சா? குழந்தைங்க இருக்காங்களா? யாரு சமைக்கறாங்க?
நாமளும் நம்ம துருப்பிடிச்ச ஹிந்திய
தூசி தட்டிப்போம்னு ஒரே Involvedஆ பேசி னிருப்போம்.
நாம நல்லா Comfortable ஆன அப்புறம் தலைக்கு Spa பண்ணிக்கோங்க? Facial உங்க முகத்துக்கு எப்படி உதவும், இதான் புதுசா வந்துருக்குற Shampoo-ன்னு பேச்சு வேற பக்கம் போகும்போதுதான்… `இவ்வளோ நேரம் நல்லாத்தானேடா போயிட்டு இருந்துச்சு… இப்ப என்ன கேடு வந்துச்சு'ன்னு யோசிச்சு, பேஜாரா இருக்கும்.
கடியா இருந்தாலும் கடசீல… நெயில் பாலீஷ் போடும்போது, கையும் காலும் பார்த்தா - அந்த கடிய லைட்டா மன்னிச்சிடு வோம். நிற்க!

Atrangi Re (Hindi - Hotstar)
இதுவும் முதல் பாதி பிடிச்சது, நம்பி இறங்கினா ரெண்டாவது பாதி கடி, க்ளை மாக்ஸ்ல எப்படியோ ஒப்பேத்திடுச்சு.
selvu
“கார் எல்லாம் வாங்கிட்டே போல. அதான் மதிக்க மாட்டீங்கிற...”
“டேய்! என்னது இது புதுசா? கார் வாங்கிட் டேன் அது இதுன்னு? நான் நடந்து போயிட்டு இருந்தப்பவே உன்னைய மதிச்சதில்லையே.”
mrithulaM
எந்த வகையிலயோ ஒரு பிரிவுக்கு அப்புறம் அன்புக்கு நம்ம மனசு ஏங்குமா இல்லையானு தெரியாது. ஆனா, இன்னொரு அன்பை ஏத்துக்க தயங்கும்றது மட்டும் உறுதி...
அ.பாரி (நாடோடி இலக்கியன்)
நேற்று, மெரினா பீச்சுக்குச் சென்றிருந்தோம். ஒமிக்ரான் அப்படீன்னு ஏதோ ஒண்ணு பேசிட்டு இருக்காங்கல்ல... அதெல்லாம் மெரினா பக்கம் வந்தா கூட்டத்தில் நசுங்கியே செத்துடும். ஜெ நினைவிடத்துக்குள்ள போகை யில் கூட்டமே என்னை தூக்கிக் கொண்டு போனது. இந்த மக்களுக்கு கொஞ்சம்கூட விழிப்புணர்வு கிடையாது.
அப்போ நீ ஏன் போன?
எல்லாருக்கும் விழிப்புணர்வு வந்து வீட்லயே இருப்பாங்க, நாம ஹாயா காத்து வாங்கிட்டு வரலாம்னு தெரியாத்தனமா போயிட்டேன். ஒலகமே என்னைய மாதிரி அறிவாளிகளா இருப்பாய்ங்கன்னு போனா... பொறவுதானே தெரிஞ்சது.
erodekathir
``ஒவ்வொரு வருசமும் இந்த கடைசி வாரம் வந்தாலே..!”
“வந்தாலே..!?”
“முடியப்போற வருசத்த சுத்தமா மறந்துட்டு, அடுத்த வருஷம் என்னவெல்லாம் செய்யப் போறோம்னு பெருசு பெருசா…”
“பெருசா பெருசா...!?”
“யோவ் முழுசா பேசவுடுய்யா... முடியப் போற இந்த வருஷமும் இப்படியேதான் எதை யும் முடிக்கவே விடாம, குறுக்க... குறுக்க…”
“என்ன குறுக்க... குறுக்க... அய்யய்யோ சாரி... நான் பேசல... மேல சொல்லு.”
“என்னத்த மேல சொல்ல..!?”
``அதென்னவோ அடுத்த வருஷம் பெருசு பெருசா செய்யப்போறேன்னு என்னவோ சொல்ல வந்தியே!”
``ஒண்ணுஞ் செய்ய மாட்டேன். அடுத்த வருஷமும் கடைசி வாரத்தில்...”
“புரிஞ்சுடுச்சு... எதும் சொல்ல வேணாம், நானே முதல் வரியைத் திரும்பவும் படிச்சுக்கு றேன்.”
``நன்றி வணக்கம்.”