ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அசைவத்திலிருந்து சைவத்துக்கு... ‘அயர்ன் லேடி’ மரீன் விஜய்யின் புதுமை முயற்சி

அசைவத்திலிருந்து சைவத்துக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
அசைவத்திலிருந்து சைவத்துக்கு...

- சாஹா

அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறுவோர், ஆன்மிகம் முதல் அன்புக்குரியவருக்காக, ஆரோக் கியத்துக்காக என ஆயிரம் காரணங்களைச் சொல்லக் கேட்கலாம். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் வுமன் மரீன் விஜய் அப்படி மாறியதன் பின்னணியில் உணர்வுபூர்வமான காரணமொன்று இருக்கிறது. அது பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், மரீன் விஜய் குறித்து ஓர் அறிமுகம்...

சென்னையில் ‘கேட்டலிஸ்ட் ஃபுட்ஸ்’ என்ற பெயரில் வீகன் உணவுகளைத் தயாரித்து வருகிறார். வீகன் உணவில் முட்டை உட்பட அசைவம் எதுவும் கிடையாது. பால், தயிர், வெண்ணெய், நெய், சீஸ், பனீர் கிடையாது. மரீன் தயாரிக்கும் வீகன் உணவுகள், அசைவ உணவுகளுக்கான மாற்று. அதாவது தயாரிப்பில் சைவம், சுவையில் அசைவம்... இப்படியொரு புதுமையான முயற்சி யின் பின்னணியோடு ஆரம்பிக்கிறார் மரீன்.

அசைவத்திலிருந்து சைவத்துக்கு... ‘அயர்ன் லேடி’ மரீன் விஜய்யின் புதுமை முயற்சி

‘`பத்து வருஷங்களுக்கு முன்னாடி வரை ஹவுஸ் வொயிஃப் என்பதுதான் என் அடையாளம். மலையாளி கிறிஸ்தவ குடும்பத்துல பிறந்த எனக்கு காலையில பிரேக்ஃபாஸ்ட்டுல ஆரம்பிச்சு, டின்னர் வரைக்கும் அசைவம் இல்லாம எதுவும் உள்ளே இறங்காது. இன்னொரு பக்கம் நான் பயங்கரமான அனிமல் லவ்வர். மேனகா காந்தி எழுதின ‘ஹெட்ஸ் அண்ட் டெயில்ஸ்’ புத்தகத்தை எதேச் சையா வாசிச்சேன். அதுல நம்முடைய பால் தேவைக்காக மாடுகளை எப்படியெல்லாம் சித்ர வதை பண்றோம், மாடுகளுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த போடப்படற ஹார்மோன் ஊசிகள், அந்தப் பாலைக் குடிக் கிறதால நமக்கு ஏற்படற பாதிப்புகள்னு பல விஷயங் களையும் படிச்சதும் சைவத்தை யும் தாண்டி வீகன் உணவு முறைக்கே மாறிடறதுனு முடி வெடுத்தேன்...’’ எமோஷனல் இன்ட்ரோ சொல்பவருக்கு சபதம் எடுக்க முடிந்த அளவுக்கு அதைப் பின்பற்றுவது எளிதான தாக இல்லை.

‘`பல வருஷங்களா அசைவம் சாப்பிட்டுப் பழகியிருந்த எனக்கு ஒரே நாள்ல அதைத் தூக்கிப் போடறது அவ்வளவு ஈஸியா இல்லை. எனக்கு மட்டுமில்லை, அசைவத்தை விடணும்னு நினைக்கிற பலரும், ‘சைவத்துக்கு மாற ரெடி... ஆனா அந்த டேஸ்ட்டை விடறதுதான் சிரமம்...’ங்கிற மனநிலையில இருந்தாங்க. அதுக்காக ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. ஒருமுறை சிங்கப்பூர், மலேசியா வுக்கு ஃபேமிலி டூர் போயிருந்தோம். அங்கே ஒரு ஃபுட் கோர்ட்டுல நாங்க சாப்பிட்ட வெஜிட்டேரியன் அயிட்டம், பார்க்கவும் சாப்பிடவும் அப்படியே அசைவம்போலவே இருந்தது. ‘இந்த ஐடியா நல்லாருக்கே... இதையே நாம ஏன் இந்தியாவுல முயற்சி பண்ணக்கூடாது’னு யோசிச்சேன். அப்புறம் அது பத்தி நிறைய ரிசர்ச் பண்ணியும் அடிக் கடி சிங்கப்பூர், மலேசியாவுக்கு டிராவல் பண்ணி, அங்க உள்ள செஃப்கிட்ட கேட்டும் விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். 2008-ல பிசினஸ் ஆரம்பிச்சேன்’’ - தொடக்கம் சொல் பவர், மாக் மீட் என்ற பெயரில் இறைச்சிக்கான மாற்றும், வீகன் மயோனைஸும் தயாரிக்கிறார்.

அசைவத்திலிருந்து சைவத்துக்கு... ‘அயர்ன் லேடி’ மரீன் விஜய்யின் புதுமை முயற்சி

‘`ஆரம்பத்துல பிளெயின் பனீர் மாதிரியான வடிவத்துலதான் மாக் மீட் கொடுத்திட்டி ருந்தேன். அதை வெச்சு இந்தியன், சைனீஸ், தாய்னு எந்த ஸ்டைல்ல என்ன உணவு வேணுமோ அவங்க சமைச்சுக்கலாம். ஒரு கட்டத்துல நிறைய பேர் அதை எப்படிச் சமைக்கிறதுனு தெரியலைன்னும் நேர மில்லைன்னும் சொன்னாங்க. அதனால மசாலா எல்லாம் சேர்த்துத் தயாரிச்சு, அப் படியே இன்ஸ்டன்ட்டா சமைச்சு சாப்பிடற மாதிரி செய்து கொடுக்க ஆரம்பிச்சேன்.

கடையில விற்கற மயோனைஸ்ல கெமிக்கல் சேர்க்கிறதால ரெண்டு வருஷம் வரை வெச்சு உபயோகிக்கலாம். ஆனா, நான் பண்ற மயோ னைஸ்ல கெமிக்கல் கிடையாது. நான் பண்ற மாக் மீட்டை வெஜிடேரியன் புரோட்டீன்னு சொல்லலாம். கோதுமையில பண்றது. புரோட்டீன் அதிகமிருக்கும். பனீரையும், கறியையும் வெச்சு என்னவெல்லாம் சமைக்க முடியுமோ, அத்தனையும் இந்த மாக் மீட் வெச்சுப் பண்ணலாம்.

ரொம்ப புதுமையான பிசினஸ் கான் செப்ட்... மக்களுக்கு அவ்வளவு ஈஸியா புரிய வைக்க முடியலை. ‘நான்வெஜ் டேஸ்ட்டுல வீகன் உணவா... வாய்ப்பே இல்லை’னு சொன்னவங்கதான் அதிகம். நிறைய கண் காட்சிகள்ல ஸ்டால் போடுவேன். அங்கே என் தயாரிப்புகளை டிஸ்ப்ளேவுல வைப்பேன். சாப்பிடற வரைக்கும் நம்ப மாட்டாங்க. டேஸ்ட் பண்ணிட்டாங்கன்னா ஷாக் ஆகி ‘சாரி’ கேட்டுட்டு வாங்கிட்டுப் போவாங்க...’’ வெற்றியை வசப்படுத்தியவர், இன்று கடை களுக்கு மட்டுமன்றி, வீகன் ரெஸ்டாரன்ட்டு களுக்கும் சப்ளை செய்கிறார்.

‘`ஆர்டர் வர ஆரம்பிச்சு, பிசினஸ் பிக்அப் ஆகத் தொடங்கின நேரம், ஃபேக்டரி புரொடக்‌ஷன் மூலமா பெரிய அளவுகள்ல தயாரிக்கலாம்னு சொன்னாங்க சிலர். அதன் படி சில நிறுவனங்களோட சேர்ந்து என் உணவுகளைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். ஆனா, அந்த உணவுகளைச் சாப்பிட்டப்ப பூச்சிமருந்தை சாப்பிடற மாதிரி ஃபீலிங். உணவோட ஷெல்ஃப் லைஃபை தக்கவைக்க கெமிக்கல் சேர்க்கிறதைத் தவிர்க்க முடி யாதுன்னு சொன்னாங்க. ‘கெமிக்கல் சேர்க் கறதை கஸ்டமர்ஸால கண்டுபிடிக்கவே முடியாது’னு சொன்னாங்க. ஆனா, அது நான் என் பிசினஸுக்கு பண்ற துரோகம்னு படவே ஃபேக்டரி புரொடக்‌ஷனை நிறுத்திட்டு, வீட்டுலயே தயாரிக்க ஆரம்பிச்சேன். வேலை கொஞ்சம் அதிகம்னாலும், குற்ற உணர்வு இல்லாம செய்ய முடியுது...’’ நிறைவாகச் சொல்பவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. ‘அயர்ன் லேடி’ என்ற பெயரில் பெண்களுக்கான தற்காப்புப் பயிற்சிகளையும் கற்றுத்தருகிறார் இவர்.

அசைவத்திலிருந்து சைவத்துக்கு... ‘அயர்ன் லேடி’ மரீன் விஜய்யின் புதுமை முயற்சி

‘`அடிப்படையில நான் ஒரு மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட். கராத்தே, சிலம்பம்னு பல கலைகள் தெரியும். ஆனா தொடர முடியலை. எனக்கு ரெண்டு மகள்கள் இருக்காங்க. அவங்க ஸ்கூல், காலேஜுக்கும் வெளியிடங்களுக்கும் போகும் போது அவங்க பத்திரமா வீடு திரும்பற வரைக்கும் ஒரு அம்மாவா நான் பயந்துகிட்டே இருந்திருக்கேன். என்னதான் அவங்க போற, வர்ற இடங்களை நமக்குச் சொல்ற டெக் னாலஜி இருந்தாலும் அவங்க பத்திரமா இருக் காங்களான்றதுதான் பெரும்பாலான பெற் றோரோட கவலையா இருக்கும். அதுக்கு ஒரே வழி அவங்களுக்கு தற்காப்புக் கலையைச் சொல்லிக்கொடுக்கிறதுதான்னு முடிவு பண்ணேன்.

கராத்தே மாதிரியான மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்க சில வருஷங்கள் ஆகும். நிறைய விதி முறைகள் இருக்கும். ஆனா, தற்காப்புக்கு அது அவசியமில்லை. ஆபத்தான தருணங்கள்ல தன்னை எப்படிப் பார்த்துக்கணும், அந்தச் சூழல்லேருந்து எப்படித் தப்பிக்கணும்னு தெரிஞ்சுகிட்டா போதும். யார் வேணா, எந்த வயசுல வேணாலும் இதைக் கத்துக்கலாம். வீடு, தெரு, படிக்கிற இடம், பணியிடம்னு எங்கேயும் எதிர்கொள்ற ஆபத்துலேருந்து தப்பிக்கிறதுக்கான அடிப்படை தற்காப்பை கத்துக்கொடுக்கிறதுதான் ‘அயர்ன் லேடி’ பயிற்சியின் கான்செப்ட். நம்ம எல்லாருக் குள்ளயும் ஒரு இரும்பு மனுஷி இருக்காங்க. அவங்களை வெளியே கொண்டு வர்றதுதான் இந்தப் பயிற்சியோட நோக்கம்...’’ ஆரோக்கியத் தில் மட்டுமல்ல, பாதுகாப்பிலும் அக்கறை கொண்டவராக முடிக்கிறார் மரீன்.