அரசியல்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய திலிருந்தே பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்து, நாட்டையே 20 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறார்கள் தாலிபன்கள்

நியூஸ் எம்பஸி

ஜோர்டன் நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் அடிதடி மோதலில் ஈடுபட்ட வீடியோதான் கடந்த வார சர்வதேச வைரல்! அந்நாட்டு நாடாளுமன்றத்தில் டிசம்பர் 28 அன்று பாலின சமத்துவம் குறித்து நடந்த விவாதத்தில், பாலின சமத்துவச் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து எம்.பி ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க, அவையில் அமளி ஏற்பட்டது. இதனால், அவரை அவையைவிட்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். வெளியேற மறுத்த அந்த எம்.பி., சபாநாயகரையே தாக்க முயன்றார். இதையடுத்து, சபாநாயகருக்கு ஆதரவான எம்.பி-க்கள், அந்த எம்.பி-யைத் தாக்க... இருதரப்பு எம்.பி-க்களுக்கு இடையே கைகலப்பு மூண்டது. இந்தக் காட்சிகள் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டதால், மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். எம்.பி-க்கள் மோதல் வீடியோ உலகம் முழுவதும் பரவியதால், “இது ஜோர்டன் நாட்டுக்கே தலைகுனிவு” என்று நொந்துகொள்கிறார்கள் அந்நாட்டுத் தலைவர்கள்!

நியூஸ் எம்பஸி

அமெரிக்காவின் டம்பா நகரிலிருந்து அட்லாண்டா நகருக்கு விமானம் ஒன்று நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது 82 வயதான முதியவர் ஒருவர், சாப்பிடுவதற்காகத் தனது மாஸ்க்கை கழற்றியிருக்கிறார். இதனால், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண் ஆத்திரமடைந்து, ``மாஸ்க்கை ஏன் கழற்றினீர்கள்? ஒழுங்காக மாஸ்க்கைப் போடுங்கள்’’ என்று சத்தம் போட்டிருக்கிறார். விமானப் பணிப்பெண் அங்கு வந்து, “சத்தம் போடாதீர்கள்; அவர் சாப்பிட்ட பிறகு மாஸ்க் அணிவார்” என்று சொல்லியும் சமாதானம் அடையாத அந்தப் பெண், திடீரென்று முதியவரின் முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதையடுத்து, அட்லாண்டாவில் விமானம் இறங்கிய பிறகு அந்தப் பெண்ணை கைதுசெய்திருக்கிறது காவல்துறை. சத்தம் போட்ட அந்தப் பெண்ணே தனது மாஸ்க்கைத் தாடையில் அணிந்திருந்தது தான் இதில் வேடிக்கை!

நியூஸ் எம்பஸி

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய திலிருந்தே பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்து, நாட்டையே 20 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறார்கள் தாலிபன்கள். கடந்த வாரத்தில் ஆப்கனில் இயங்கிவந்த தன்னாட்சி அமைப்புகளான தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் புகார் ஆணையத்தையும் கலைத்துவிட்டது தாலிபன் அரசு. இது குறித்து தாலிபன்களின் செய்தித் தொடர்பாளர் பிலால் கரீமி, ``தற்போதைய சூழலில் இவை இரண்டும் தேவையற்ற ஆணையங்கள். எதிர்காலத்தில் இந்த ஆணையங்கள் தேவைப் பட்டால் அரசு மீண்டும் கொண்டு வரும்’’ என்று சொல்லியிருக்கிறார். `ஏற்கெனவே ஜனநாயகம் கேள்விக்குறியான ஆப்கனில், தற்போது தேர்தல் ஆணையமும் கலைக்கப்பட்டுவிட்டதால், இனி ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்!