Published:Updated:

அமெரிக்கா: கருக்கலைப்பு தீர்ப்பு; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது சிறுமி சந்தித்த சிக்கல்!

அமெரிக்கா - போராட்டம் ( ட்விட்டர் )

ஓஹியோ மாகாணத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருக்கிறார். அந்தச் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா: கருக்கலைப்பு தீர்ப்பு; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது சிறுமி சந்தித்த சிக்கல்!

ஓஹியோ மாகாணத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருக்கிறார். அந்தச் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
அமெரிக்கா - போராட்டம் ( ட்விட்டர் )

அமெரிக்காவில் நடைமுறையிலிருந்த கருக்கலைப்புக்கான அரசியலமைப்புப் பாதுகாப்பை ஜூன் 24-ம் தேதி அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்து, கருக்கலைப்பு தடையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பரவலாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருக்கிறார். அந்தச் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் வசிக்கும் ஓஹியோ மாகாணத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால்... அந்தச் சிறுமியை அண்டை மாகாணமான இண்டியானாவுக்கு கருக்கலைப்பு செய்ய அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளை மாளிகை-அமெரிக்கா
வெள்ளை மாளிகை-அமெரிக்கா

இந்தச் சம்பவம் தொடர்பாக இண்டியானாவின் மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் கெய்ட்லின் பெர்னார்ட், ``பாதிக்கப்பட்ட குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க உதவுமாறு ஓஹியோவிலுள்ள சக மருத்துவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. இந்தச் சம்பவம் மட்டுமல்ல... அமெரிக்கா முழுவதிலுமிருந்து கருக்கலைப்புக்காக எங்கள் கிளினிக்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால், கருக்கலைப்புக்கு நாங்கள் வழங்கிவரும் அதிக கவனிப்பைத் தொடர்ந்து வழங்க இயலுமா என எங்களுக்குத் தெரியாது. இண்டியானாவில் கருக்கலைப்பு இன்னும் சட்டவிரோதமானது அல்ல. ஆனால் இந்த மாத இறுதியில் மாகாணச் சிறப்பு அமர்வு கூடும்போது சட்டமியற்றுபவர்கள் இந்த நடைமுறையைத் தடைசெய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ வாய்ப்பிருக்கிறது" என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
குழந்தை
குழந்தை

பாதிக்கப்பட்ட சிறுமி கருக்கலைப்பு செய்வதற்காக மாநில எல்லைகளைக் கடப்பது சரியானதா என்று தெற்கு டகோட்டாவின் குடியரசுக் கட்சி கவர்னர் கிறிஸ்டியிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, ``கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைப் பாதுகாக்கக் கருக்கலைப்பு செய்வது அவசியம் என்ற சரியான மருத்துவத் தரவு இல்லாவிட்டால், கருக்கலைப்பு செய்ய முடியாது. எனவே, அந்த 10 வயது சிறுமியைப்போல ஒவ்வோர் உயிரும் விலைமதிப்பற்றது" எனக் கூறியிருக்கிறார்.

முன்னதாக நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சேபனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.