Published:Updated:

`இது ஒரு நியாயமற்ற போர்’ - கொரோனாவுக்கு சிகிச்சையளித்த 100 இத்தாலி மருத்துவர்கள் மரணம்

இத்தாலி மருத்துவர்கள்
இத்தாலி மருத்துவர்கள் ( AP )

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த நூறு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 16 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 95,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இத்தாலியில்தான் அதிகபட்சமாக 18,000 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 1,43,000 ஆக உள்ளது. இருந்தும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசும் மருத்துவர்களும் திணறி வருகின்றனர்.

இத்தாலி மருத்துவர்கள்
இத்தாலி மருத்துவர்கள்
AP

இந்த நிலையில், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய மருத்துவர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது பற்றிப் பேசிய அந்தச் சங்கத்தின் தலைவர் பிலிப்போ அனெல்லி, ``கோவிட் 19 காரணமாக இத்தாலியில் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மட்டும் 100 ஆக உள்ளது. வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த எண்ணிக்கையில் ஓய்வு பெற்று தற்போது பணிக்குத் திரும்பிய மருத்துவர்களும் அடங்குவர்.

`இறுதி நேரத்தில் தனிமை; முகம் பார்க்க அனுமதி இல்லை' - வேதனையிலும் வேதனை தரும் இத்தாலி உயிரிழப்பு

இது ஒரு நியாயமற்ற போர். இனிமேல் எங்கள் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் வைரஸுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போராட அனுப்பப்படுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. இங்கு செவிலியர்கள் மட்டும் 30 பேர் இறந்துள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10% பேர் சுகாதாரப் பணியாளர்கள். மருத்துவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தாலி மருத்துவர்கள்
இத்தாலி மருத்துவர்கள்
AP

ஐரோப்பாவில் ஊரடங்கு அறிவித்த முதல் நாடு இத்தாலிதான். அங்கு வைரஸ் வெடிப்பு உறுதியானதும் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் சிறைவைக்கப்பட்டனர். இருந்தும் அங்கு உயிரிழப்புகளும் பாதிப்புகளும் கடுமையாக உயர்ந்தன. இத்தாலியில் அதிக முதியவர்கள் இருப்பதே அதிக உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். அப்படி சேர்க்கப்பட்டவர்களும் முதியோர்கள் என்பதால் மருத்துவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர் திரும்ப முடியாமல் சிக்கிய மகன்; ஸ்கூட்டரில் 1,400 கி.மீ! -நெகிழவைத்த தாயின் பாசப் பயணம்
அடுத்த கட்டுரைக்கு