Published:Updated:

இலங்கை அதிபர் ராஜபக்சே 21ந்தேதி இந்தியா வருகிறார்!

இலங்கை அதிபர் ராஜபக்சே 21ந்தேதி இந்தியா வருகிறார்!
இலங்கை அதிபர் ராஜபக்சே 21ந்தேதி இந்தியா வருகிறார்!
இலங்கை அதிபர் ராஜபக்சே 21ந்தேதி இந்தியா வருகிறார்!

புதுடெல்லி: சாஞ்சியில் புத்த மத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வர சம்மதம் தெரிவித்திருப்பதாக சுஷ்மா சுவாராஜ் தெரிவித்துள்ளார்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சாஞ்சி நகரில், புத்தமத கல்வி மையம் அமைக்கப்படுகிறது.

வருகிற 21-ந்தேதி அன்று நடைபெறும் இந்த விழாவில், பூட்டான் பிரதமர் லியோன்போ ஜிக்மே முன்னிலையில் புத்த மத கல்வி மையத்திற்கான அடிக்கல்லை ராஜபக்சே நாட்டுகிறார். பா.ஜனதா மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மாசுவராஜ், இந்த தகவலை தெரிவித்துள்ளார்

இந்த விழாவில் பங்கேற்கும் வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜபக்சேவின் இந்தியா வருகைக்கான சுற்றுப்பயண திட்டம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.