Published:Updated:

யாழ்ப்பாணத்தில் பாக். ஒட்டுகேட்பு நிலையம்: இந்தியா சந்தேகம்!

யாழ்ப்பாணத்தில் பாக். ஒட்டுகேட்பு நிலையம்: இந்தியா சந்தேகம்!
யாழ்ப்பாணத்தில் பாக். ஒட்டுகேட்பு நிலையம்: இந்தியா சந்தேகம்!
யாழ்ப்பாணத்தில் பாக். ஒட்டுகேட்பு நிலையம்: இந்தியா சந்தேகம்!

புதுடெல்லி/கொழும்பு  யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான், ஒட்டுகேட்பு  நிலையம் ஒன்றை அமைத்திருப்பதாக இந்திய உளவுத் துறையான ‘ரா’ சந்தேகம்  தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளையும், தொலைதொடர்புகளையும்  ஒட்டுக்கேட்பதற்காகவே இந்த மையத்தை பாகிஸ்தான் யாழ்ப்பாணத்தில்  அமைத்துள்ளதாகவும், 'ரா’ மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்  கூறியுள்ளதாக தெரிகிறது.

கடந்த மூன்று நான்கு மாதங்களாக பாகிஸ்தானின் உளவுத்துறையான
ஐ.எஸ்.ஐ., யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை அதிகப்படுத்தியதாகவும்,அந்த  சமயத்தில்தான் அது யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்கேட்பு மையத்தை அமைத்திருக்கலாம்  என்று மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்'ரா’ சந்தேகம் தெரிவித்துள்ளது.

'ரா’வின் இந்த அறிக்கையை தொடர்ந்து,நேற்று டெல்லியில் கூடிய இந்திய பாதுகாப்புத்  துறை உயரதிகாரிகள் அவசரமாக கூடி ஆலோசித்தனர்.

அப்போது இந்த விஷயத்தை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது  என்றும்,பாகிஸ்தானின் ஒட்டுக்கேட்பு மையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது  குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்று கோருவதென்றும் இந்த  சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

##~~##
மேலும் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னும் ஒருநாட்டின் எல்லையை பயன்படுத்துவது  சர்வதேச சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும்,சீனா ஏற்கனவே அந்தமான்  தீவுகளின் கப்பல் நகர்வுகளை கண்காணிப்பதற்காக கொக்கோ தீவுகளில் இவ்வாறான  கண்காணிப்பு மையத்தை அமைத்திருந்ததையும் ஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிகள்  சுட்டிக்காட்டியுள்ளனர்
இதன் மூலம், விசாகப்பட்டிணத்தில் உள்ள ரஷ்யாவின் ஐஎன்எஸ் சக்ரா அணு நீர்மூழ்கி  கப்பல் மற்றும் இந்தியாவின் ஏனைய நீர்மூழ்கிக்கப்பல்களின் நகர்வுகளை கண்காணிக்க  பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்கிறது.
எனவே இதனை அதி உயர்மட்ட எச்சரிக்கையாக எடுத்து நடவடிக்கை மேற்கொள்வது  என்று இந்திய பாதுகாப்பு தரப்பினர் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.