Published:Updated:

இந்திய நீதிபதிக்கு இலங்கை விசா மறுப்பு!

Vikatan Correspondent
இந்திய நீதிபதிக்கு இலங்கை விசா மறுப்பு!
இந்திய நீதிபதிக்கு இலங்கை விசா மறுப்பு!
இந்திய நீதிபதிக்கு இலங்கை விசா மறுப்பு!

புதுடெல்லி: இந்திய முன்னாள் தலைமை நீதிபதி வர்மாவுக்கு, இலங்கை விசா  மறுத்துள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது போன்ற  குற்றச்சாட்டுகளின் பேரில், இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த  ஷிரானி பண்டாரநாயகே,அதிபர் ராஜபக்சேவால் கடந்த சில நாட்களுக்கு முன் பதவி  நீக்கம் செய்யப்பட்டார்.

##~~##
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜபக்சே அரசின் நடவடிக்கைகளை  விமர்சித்ததாலேயே ராஜபக்சே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிய இந்திய முன்னாள்  தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு  இலங்கை செல்வதாக இருந்தது. ஆனால் குழுவின் தலைவராக உள்ள வர்மாவுக்கு  இலங்கை விசா மறுத்துள்ளது.