Published:Updated:

இலங்கை விவகாரத்தில் அவசரப்பட முடியாது: இந்தியா திட்டவட்டம்

இலங்கை விவகாரத்தில் அவசரப்பட முடியாது: இந்தியா திட்டவட்டம்
இலங்கை விவகாரத்தில் அவசரப்பட முடியாது: இந்தியா திட்டவட்டம்
இலங்கை விவகாரத்தில் அவசரப்பட முடியாது: இந்தியா திட்டவட்டம்

புதுடெல்லி: இலங்கை விவகாரத்தில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும்  என்றும், ஜனநாயகத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது என்றும்  வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான நடைபெற்ற  விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும்,  ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் தொடர் அட்டூழியங்களை கண்டித்தும்,  இவ்விவகாரத்தில் இந்திய அரசு தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும்,  மவுனமாக வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும், ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு  எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினர்.

இந்நிலையில் விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர்  சல்மான் குர்ஷித்," இலங்கை பிரச்சனை மொழி ரீதியிலான பிரச்சனை அல்ல. இலங்கை  உடனான வரலாறு, கலாச்சார ரீதியிலான உறவை பராமரிக்க வேண்டியது  அவசியம்.இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும்  என்பதில் இந்தியாவிற்கு எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை.

மனித உரிமை மீறல் குறித்த இலங்கை விசாரணையில் வெளிப்படைத் தன்மை  வேண்டுமென இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதே சமயம காரசாரமான விவாதம்  நடத்தினாலும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அனைவரும் உணர  வேண்டும்.

ஜனநாயகத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நடவடிக்கை எடுக்க  முடியாது.தமிழர்களுக்கு வாழ்வுரிமையை அளிப்பதுடன், இலங்கை அரசு அதை ஏற்றுக்  கொள்ளுமாறு கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுப்பது தான் விவேகம் உள்ளது.

உறுப்பினர்களின் உணர்வை மத்திய அரசு எப்போது மதிக்கும்.இந்த அவையில்  வெளிப்படுத்தப்படும் உணர்வுகள் உலகுக்கு நமது நிலையை உணர்த்தும் .நமது  வேதனைகள், ஏமாற்றங்கள் இருந்தாலும் இலங்கையை எதிரிநாடு என்று கூற முடியுமா?.

தமிழக எம்.பிக்களின் உணர்வுகளை மதிக்கும் அதே நேரத்தில் மற்ற உறுப்பினர்களின்  உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.மேலும் இந்தியா, 13வது சட்டத்  திருத்தை செயல்படுத்த வேண்டும் என்று இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி  வருகிறது.இன்று நடந்த விவாதத்தின் அடிப்படையில் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான  தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

அதிமுக, திமுக  வெளிநடப்பு

ஆனால் சல்மான் குர்ஷித் பதில் திருப்தி இல்லை என்றும்,  அவரது  பேச்சைக் கண்டித்தும் அதிமுக, தி.மு.க. மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.