Published:Updated:

The Making Of The Atomic Bomb புத்தகம் பேசும் அரசியல்!

ரிச்சர்ட் ரோட்ஸ்! மேக்கிங் ஆஃப் அட்டாமிக் பாம் [Making Of Atomic Bomb] படைத்தவர், மானுட வரலாற்றாசிரியர், பத்திரிகையாளர், அனைத்திற்கும் மேல் எழுத்தாளர். சமீபத்தில் மானுட சரித்திரத்தில் ஆற்றலின் பங்கைக் குறித்து ஒரு புத்தகம் [Energy: A Human History] எழுதி அதற்காக புலிட்சர் வருதையும் வென்றுள்ளார்.

The Making Of The Atomic Bomb புத்தகம் பேசும் அரசியல்!
The Making Of The Atomic Bomb புத்தகம் பேசும் அரசியல்!

“வன்முறை என்பதை உளவியல் ரீதியிலான மனக்கோளாறு'' என்று சொல்ல முடியாது. அது மனிதர்களை வெகு எளிதாகத் தன் கருவியாக்கிக்கொள்ளும் மற்றொரு கருவி. வன்முறையின் சாறு முழுக்கக் காயங்கள் தான். 

ரிச்சர்ட் ரோட்ஸ்! தி மேக்கிங் ஆஃப் தி அட்டாமிக் பாம் [The Making Of The Atomic Bomb] படைத்தவர், மானுட வரலாற்றாசிரியர், பத்திரிகையாளர், அனைத்துக்கும் மேல் எழுத்தாளர். ஆற்றலின் பங்கைக் குறித்து இந்தப் புத்தகம் எழுதியதற்காக புலிட்சர் விருதையும் வென்றுள்ளார். இந்தப் புத்தகத்தில் ஆற்றல் மாற்றத்தால் உண்டாகும் வன்முறை பற்றி விரிவாக பேசியுள்ளார். ஆற்றலின் வரலாற்றை எழுதும் இந்தப் புள்ளிக்கு அவரை நகர்த்தியது நமது பூமி. 

இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் அதன் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத மாபெரும் ஆற்றல் மாற்றம்தான் கரி நீக்கல் எனப்படும் decarbonising. இந்த ஆற்றல் மாற்றத்தை நோக்கி உடனடியாக நாம் நகர வேண்டியதன் அவசியத்தைத்தான் இந்த மானுட வரலாற்று ஆசிரியர் முன்வைக்கிறார். உலகம் இன்று வரை பார்த்த, பார்த்துக்கொண்டிருக்கும் ஆற்றல் மாற்றங்கள் நடந்த கதைகளை நமக்கு கடத்துகிறார். 

பல ஆற்றல் மாற்றங்கள் இதற்கு முன்பு நடந்திருந்தாலும் அவரைப் பொறுத்தவரை கார்பனை விட்டு நகரும் இந்தப் புள்ளிதான் மாபெரும் மாற்றம். ஏனென்றால், 1950-களில் தொடங்கி சூழலின் மீதான மனிதனின் வன்முறைகள் வேறு மாதிரியான பரிமாணத்தை எட்டி இருக்கின்றன. முன்பெல்லாம் மனித அலட்சியங்களின் விளைவுகள் அந்த குறிப்பிட்ட ஊர்ப்புறங்களை மட்டுமே பாதித்தன. ஆனால், 1950-களின் பிறகு சூழலுக்கு எதிராக அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மொத்த உலகையுமே பாதித்தது.

"நமக்கு என்னவெல்லாம் கிடைக்கிறதோ, அவை எல்லாவற்றையும் உபயோகப்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்று மக்கள் கார்பன் அற்ற ஆற்றலையும் பயன்படுத்திப் பார்க்கிறார்கள் என்பது மகிழ்ச்சிதான். ஆனால், கிடைப்பவை எல்லாம் என்ற தலைப்புக்குள் அணு ஆயுத சக்தியும் அடங்கி விடுவதுதான் சோகம்.'' அணு ஆயுதத்தின் உருவாக்க வரலாற்றைப் படைத்த இவரின் பல புத்தகங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் அணு ஆயுத தீவிரவாதம் என்பது முக்கியமான பேசுபொருளாக இருக்கின்றது. அணு ஆற்றலைக் கண்டுபிடித்தது என்பது மனித வரலாற்றில் ஒரு மாபெரும் சக்தியைக் கண்டெடுத்ததாக இருந்தாலும் இந்த ஆற்றலைக் கொண்டு நடந்த, நடக்கும் வன்முறைகள் அழிவுப் பாதையில் இந்த உலகை இட்டுச் செல்பவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.      

அவரின் பெரும் ஆதங்கம் சூழலுக்கு ஏற்ற ஆற்றலை மக்களுக்கு அறிமுகப்படுத்தும்போது அவர்கள் அதை மறுப்பதுதான். முன்பைவிட இப்போது விழிப்பு உணர்வு வளர்ந்திருந்தாலும் கார்பன் இல்லாத புது ஆற்றல் வழியை மக்கள் கண்டெடுக்க, பயன்படுத்த அவர்களைத் தன் எழுத்தின் மூலமாகத் தூண்ட வேண்டும் என்ற எண்ணம்தான் இதுபோன்ற புத்தகங்களை இவர் படைக்கக் காரணம் என்கிறார். அதனாலேயே ஆற்றல் மாற்றங்களின் கதைகளை இன்னும் இன்னும் சொல்லும் புத்தகங்களைத் தாராளமாக இவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்.

ஆனால், ஆற்றல் மாற்றங்கள் என்பது நாம் முடிவெடுத்துவிட்டால் மட்டும் உருவாகப் போகும் மாற்றம் இல்லையே. கார்பனை எரிபொருளாக்கும் எத்தனையோ கார்ப்பரேட் கம்பெனிகள் உலகம் முழுவதும் நிறைந்து கிடைக்கையில், அரசியல் லாபங்களைத் தாண்டி மாற்றம் உருவாக்க யாரும் முனைவது இல்லை. அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால் "இப்போது உலகம் எங்கும் இரு சாரார்- அடிப்படை ஆற்றல்கள், புதுப்பிக்க இயலும் ஆற்றல்கள் என்று விவாதம் செய்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அரசியல் லாபங்களின் அடிப்படையில் இல்லாத உண்மையின் அடிப்படையிலான விவாதம் என்பது ரொம்பக் குறைவு.” புதுப்பிக்க முடிந்த ஆற்றலை நோக்கி நாம் நகர முக்கியமான தடையாக இருக்கப் போவதும் இதுதான்.