Published:Updated:

இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு

இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
டெல்லி: இலங்கை விவகாரம் தொடர்பாக இன்று இரவு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஏற்பாடு செய்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இரண்டு திருத்தங்கள் செய்ய கோரி மத்திய அரசுக்கு  தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை வைத்தார்.
ஆனால்  இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாநிதி நேற்று அறிவித்தார்.
##~~##
மேலும், தீர்மானத்தை திருத்தினால் மீண்டும் கூட்டணியில் சேருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் ஒரு பெரிய குண்டை போட்டார் கருணாநிதி.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஏற்பாடு செய்துள்ளார். டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.