Published:Updated:

இனப்படுகொலையில் இந்தியா கூட்டுக் குற்றவாளி - மும்பையில் வைகோ முழக்கம்

 இனப்படுகொலையில் இந்தியா கூட்டுக் குற்றவாளி - மும்பையில் வைகோ முழக்கம்
இனப்படுகொலையில் இந்தியா கூட்டுக் குற்றவாளி - மும்பையில் வைகோ முழக்கம்
மும்பை: இலங்கை இனப்படுகொலைக்கு இந்திய அரசும் கூட்டுக் குற்றவாளி என இன்று மதியம் மும்பையில் நடந்த பொதுக் கூட்டத்தில் வைகோ குற்றம் சாட்டினார்.
 இனப்படுகொலையில் இந்தியா கூட்டுக் குற்றவாளி - மும்பையில் வைகோ முழக்கம்
இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்கக் கோரியும் இலங்கை விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் மும்பையில் உள்ள 'மும்பை தமிழர் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, ''இலங்கையில் நடந்த தமிழின அழிப்பிற்கும் இனப் படுகொலைகளுக்கும் இந்திய அரசும் மன்மோகன் சிங்கும் கூட்டுக் குற்றவாளிகள்" என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மும்பை மாநகராட்சி மன்ற உறுப்பினரும் அமைப்பின் தலைவருமான‌ மும்பை தமிழ் செல்வன் தலைமையில் மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த இந்தப் கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- குளஸ்