Published:Updated:

ஈரான் அதிபரை மிரட்டும் ட்ரம்ப்பின் 'BE CAUTIOUS' ட்வீட்!

"ஈரானுடனான போர் போருக்கெல்லாம் தாயாக அமையும் என்பதை அமெரிக்கா தெரிந்து கொள்ளவேண்டும். சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாதீர்கள். அது உங்களை வருந்தச் செய்யும்” என்று கடிந்துகொண்டார். அதற்கு பதிலடி கொடுப்பதாக திங்கள் காலை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்...

ஈரான் அதிபரை மிரட்டும் ட்ரம்ப்பின் 'BE CAUTIOUS' ட்வீட்!
ஈரான் அதிபரை மிரட்டும் ட்ரம்ப்பின் 'BE CAUTIOUS' ட்வீட்!

ண்ணெய் உள்ள நாட்டுடன் அமெரிக்கா சண்டை போடவில்லை என்றால்தான் அது செய்தி. அப்படிப்பட்ட சண்டையைதான் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து செய்துவருகிறது. இது இன்று ஆரம்பித்த சண்டை அல்ல. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகால சண்டை. அந்த டைம்லைன் இதோ...

1984

ஈரான்- ஈராக் சண்டைக்குப் பிறகு அமெரிக்கா ஈரானுக்கு ஆயுதங்கள் விற்பதை நிறுத்தியது. எல்லா வகையிலும் அமெரிக்கா தனது பங்கையும், உதவியையும் தர மறுத்தது.

1995

அன்றைய அமெரிக்க அதிபர் அமெரிக்கா - ஈரான் இடையேயான வர்த்தகத்தை நிறுத்தினார்

1996

ஈரான், லிபியா தண்டனைச் சட்டம் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது. இரு தேசத்தின் மீதும் கடும் தண்டனைகள் வீசப்பட்டது.

2001 

காதன்னி அரசின் போது தண்டனை அளவு குறைக்கப்பட்டது, இருந்தாலும் தண்டனையை விலக்கிக் கொள்ள மறுத்தது அமெரிக்கா. 

2005 

ஈரான் அணு ஆயுதங்களில் வளர்ந்து வருவதைத் தடுக்க அதை எதிர்த்து மேலும் தண்டனைகள் முட்டுக் கட்டையாக போடப்பட்டது. ஜார்ஜ் புஷ் அணு ஆயுதம் சம்பத்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தார்.

2006 

லிபியா தண்டனையில் இருந்து விலக்கப்பட்டு ஈரான் தண்டனைச் சட்டம் மட்டும் அமலில் இருந்தது.

2010-2011 

ஒபாமா காலத்தில் கூட ஈரான் மீதான தண்டனை அப்படியே தொடர்ந்தது. ஈரான் பொருட்கள் இறக்குமதியும் குறைந்து போனது. ஈரானின் ராணுவ உபகரணங்கள், விமான பழுதுகளுக்காகக் கூட அவர்களிடம் செல்லக் கூடாது என்று கடும் சட்டங்கள் விதிக்கப்பட்டன. 

டொனால்டு ட்ரம்ப் வந்தது முதலே தன் நாட்டை தனிப்பெரும் நாடாக மாற்றும் முனைப்பில் மற்ற நாடுகளுடனான வர்த்தக, தொழில் முறைகளில் கூட கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். விசா வழங்குவதில் தொடங்கி நாட்டின் எல்லையில் சுவர் எழுப்புவது, சில மத ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் மக்களுக்கு அமெரிக்காவில் நுழையத் தடை என இன்றைய பலநாட்டு சந்திப்பு வரை அவரின் பார்வை மாறுபட்டே நிற்கிறது. நாடுகள் மீதான தண்டனைச் சட்டங்களும் அவரது முந்தைய அறிவிப்புகளைப் போன்றே கடுமையானதாக இருந்து வருகிறது.

ரவுகானி - ட்ரம்ப் ட்விட்டர் சண்டை

இந்நிலையில் ஈரானின் 'டெஹரன் அணு ஆயுத வளர்ச்சி' நிறுவனம், தீவிரவாதிகளுக்கு உதவுவதாகச் சொல்லி ஈரானுக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் சில விஷயங்களைச் செய்தார். அணு ஆயுத சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்பட்டது. முஸ்லிம் அதிகம் வாழும் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி ஈரான் மீதான எல்லா வர்த்தக வழியிலும் தடைகள் போடப்பட்டன. அமெரிக்கா மட்டுமின்றி மற்ற நாடுகளையும் ஈரானுக்கு இடையேயான வர்த்தகத்தை நிறுத்தச் சொல்லி ஆணைகளும் அனுப்பப்பட்டது. இந்த மாதம்கூட ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் அளவை சுழியமாக்க அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தது. இதன் காரணமாக, ஈரான் தலைவர்கள் தன்னிடம் வந்து ஏதேனும் புது ஒப்பந்தங்கள் போடுவார்கள் என்று ட்ரம்ப் காத்திருந்ததாகவும் அது நிகழவில்லை என்றும் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி தலைமையில் அந்நாட்டு அதிகாரிகள் கூட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. அதில் பேசிய ஹசன் ரவுகானி, 'ஈரானுடனான அமைதி, அமைதிக்கெல்லாம் தாயாக அமையும். ஈரானுடனான போர் போருக்கெல்லாம் தாயாக அமையும் என்பதை அமெரிக்கா தெரிந்து கொள்ளவேண்டும். சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாதீர்கள். அது உங்களை வருந்தச் செய்யும்” என்று கடிந்துகொண்டார்.

அதற்கு பதிலடி கொடுப்பதாக திங்கள் காலை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் “அமெரிக்காவுடன் மீண்டும் மோத ஒருபோதும் நினைக்காதீர்கள். இல்லையேல் இதுவரை வரலாறே கண்டிராத பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் வன்முறை பேச்சுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படும் நாடு அல்ல நாங்கள். கவனமாக இருங்கள்” என்பதை அழுத்தமாக பதியவைக்கும் விதமாய் ஆங்கிலத்தில் எல்லா எழுத்துகளையும் கேப்பிட்டல் லெட்டரில் எழுதி ட்வீட் செய்தார்.

அமெரிக்க அதிபர்கள் அனைவரும் தங்களது பதவிக்காலத்தில் ஒரு போர் செய்திருக்கிறார்கள். அந்த ஃபார்முலாவை உடைக்க ட்ரம்ப் விரும்ப மாட்டார். அது தான் அடுத்த தேர்தலுக்கு அவரது பிரசார காரணியாக அமையும் என்று அமெரிக்க விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 'அமெரிக்காவை சிறப்பாக மாற்றுவேன்' என்று கூறிய ட்ரம்பின் பாதை மற்ற நாடுகளை பாதிக்கிறது என்ற கருத்துகள் வலுக்கத்துவங்கியுள்ளன. ட்ரம்ப் சுதாரித்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதை ஈரான் விஷயமும் அழுத்திச் சொல்கிறது.