உலகின் கொந்தளிப்பான எல்லைக்கோடுகளில் ஒன்று மீண்டும் ஒருமுறை பதற்றத்தில் பற்றி எரிகிறது. இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தேசப் பிரிவினை தொடங்கி கார்கில்வரை நான்கு யுத்தங்கள் நடத்தியும், ஒரு பிரச்னைக்குக்கூடத் தீர்வுகாண முடியவில்லை. அதுவே நிரந்தர உண்மையும்கூட. யுத்தங்களால் ஒருபோதும் தீர்வுகள் கிடைக்காது. இப்போது மறுபடியும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன போர் மேகங்கள். போரைத் தீர்மானிக்கும் இருவேறு சக்திகளாக மோடியும் இம்ரான்கானும் எதிரெதிர் துருவங்களில் நிற்கிறார்கள். இரு நாடுகளிலும் வாழும் 155 கோடி மக்களின் எதிர்காலம் இவர்கள் இருவரின் கைகளில் சிக்கியிருக்கிறது!

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிதீர்க்கும் தாக்குதலை 12 நாள்களில் தொடுத்தது இந்தியா. ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்-2’ என்று வர்ணிக்கப்படும் இதை மேற்கொண்டது இந்திய விமானப் படை. பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலை இந்திய விமானப் படை ஒருங்கிணைந்து நிகழ்த்திய இந்தத் தாக்குதல் பல விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. எப்படி என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்திய விமானப்படை விமானம், எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்று நடத்தும் முதல் தாக்குதல் இது. கார்கில் போர் உச்சத்தில் இருந்தபோதும் சரி, இந்திய வீரர்கள் சிலரைச் சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்து பாகிஸ்தான் படையினர் கொன்றபோதும் சரி, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்திய விமானப் படையை எல்லை தாண்டிச்செல்ல அனுமதிக்கவில்லை.

உரி தாக்குதலுக்குப் பிறகு 2016-ம் ஆண்டில், தனது முதல் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை மேற்கொண்டது இந்திய ராணுவம். அப்போதுகூட பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிக்குள் சென்றுதான் தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. ஆனால், இந்த முறை பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் 65 கி.மீ வரை பறந்துசென்று தாக்குதல் நிகழ்த்தின இந்திய விமானங்கள்.

தாக்குதலுக்குப் பிறகு இந்தியா வெளியிட்ட அறிக்கை சாதுர்யம் மிகுந்தது. ‘பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை நாங்கள் தாக்கவில்லை. பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கமும் இல்லை. தீவிரவாத முகாம்களை அழிப்பது மட்டுமே நோக்கம். இந்தியாமீது அடுத்த தாக்குதலை நடத்துவதற்காக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர், கூடித் திட்டம் தீட்டுவதாக உளவுத் தகவல் கிடைத்தது. எனவே, அவர்களின் திட்டத்தை முறியடிக்கவே இந்தத் தாக்குதலை நடத்தினோம்’ என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டாலும், சில உண்மைகளை யாருமே புறக்கணிக்க முடியாது. இந்தியா, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது உண்மை. தாக்குதல் நிகழ்ந்த பாலகோட் நகரத்தை ஒட்டிய மலைப்பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி முகாம் இருப்பது உண்மை. அந்த அமைப்பின் தலைவரான மவுலானா மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசார், இந்த முகாமை நிர்வகிப்பது உண்மை. முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இங்கு தீவிரவாதிகளுக்குப் பயிற்சி தருவது உண்மை. ‘புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய எல்லையை ஒட்டிய முகாம்களில் இருந்த தீவிரவாதிகள் பலரையும் இந்த முகாமுக்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருந்தது. புல்வாமா தாக்குதலின் வெற்றியைக் கொண்டாட இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலரும் திங்கள்கிழமை இரவு இங்கு வந்தனர். இதைத் தெரிந்துகொண்டுதான் செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினோம்’ என்பது இந்தியா தரப்பில் சொல்லப்படும் விளக்கம். ஆனால், வானிலிருந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படைக்கு, கீழே இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெரிய வாய்ப்பில்லை. அந்த முகாம் அருகே போக உள்ளூர் மக்களை பாகிஸ்தான் ராணுவம் அனுமதிப்பதில்லை. எனவே, முகாம் மீது குண்டு விழுந்ததா, தாக்குதலில் தீவிரவாதிகள் இறந்தார்களா என்பதெல்லாம் நீண்ட காலம் ரகசியமாகவே இருந்துவிடும்.

இன்னொரு நாட்டின்மீது இந்தியா நிகழ்த்திய தாக்குதலை இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பு தவிர பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாகூட கண்டிக்கவில்லை. ‘தீவிரவாதிகள் மீதான தாக்குதல் வரவேற்கப்பட வேண்டியதே’ என்றுதான் சீனாவும் சொல்லியிருக்கிறது. இது இந்தியாவுக்குச் சாதகம். தீவிரவாதம் குறித்தான உலகின் கருத்து இப்போது மாறியிருக்கிறது. கார்கில் போர் சமயத்தில் வாஜ்பாய் இதைச் செய்திருந்தாலோ, மும்பை தாக்குதல் நேரத்தில் மன்மோகன் சிங் இதைச் செய்திருந்தாலோ, இந்தியா உலகின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கும். ஆனால், அநேகமாக உலகின் எல்லா நாடுகளும் தீவிரவாதத்தின் பாதிப்புக்கு ஆளாகியுள்ள இன்றைய சூழல் இந்தியாவுக்கு ஆதரவாக மாறியிருக்கிறது. பாகிஸ்தான் கிட்டத்தட்ட தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. தனக்கு நிதியுதவி செய்து, தன் அடாவடிகள் எல்லாவற்றுக்கும் உதவியாக இருக்கும் சீனாவுக்கே, பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. சீனாவின் உய்குர் பகுதியில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் பலரும் பாகிஸ்தானில்தான் பயிற்சி பெறுகிறார்கள். இந்தச் சூழலில் சீனா உட்பட உலகமே இந்தியாவின் பக்கம் நிற்கிறது. நிற்க...

இந்தியா தாக்குதல் நிகழ்த்திய மறுநாளே, பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி நம் காஷ்மீருக்குள் நுழைந்து குண்டுவீசியுள்ளன. ‘‘எங்களாலும் முடியும் என்பதைக் காட்டவே தாக்குதலை நடத்தினோம். ஆளில்லாத இடங்களில்தான் குண்டு வீசினோம்’’ என்கிறது பாகிஸ்தான். ஊடுருவிய விமானங்களைத் துரத்திச்சென்றபோது இந்தியாவின் ‘மிக்’ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவைச் சமாதானப் பேச்சுக்கு அழைத்திருக்கிறார். இந்தச் சூழலில் ‘இந்தியா பாகிஸ்தான்மீது போர் தொடுக்க வேண்டும்’ என்ற தேசபக்திக் குரல்கள் எழுகின்றன. இந்தியா போர் தொடுக்க வேண்டுமா? அதனால் சாதகங்கள் என்ன, பாதகங்கள் என்ன என்று அலசினால், பாதகங்கள்தான் அதிகம். அவை என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு போரால் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சொல்லப்போனால், பாகிஸ்தானுடனான ஒவ்வொரு போருக்குப் பிறகும் நாம் எதிர்கொள்ளும் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரிக்கத்தான் செய்தன. ‘போர் ஒரு பிரச்னையைத் தீர்க்காது; மாறாக பல புதிய பிரச்னைகளை உருவாக்கிவிடும்’ என்பதுதான் உலக நாடுகள் கண்டறிந்த உண்மை. ‘தீவிரவாதத்தை அழிப்போம்’ என்று சொல்லிக்கொண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள்மீது போர் தொடுத்தது அமெரிக்கா. 17 ஆண்டுகள் தாண்டிவிட்டன. மூன்று அமெரிக்க அதிபர்கள் மாறிவிட்டார்கள். உலகின் மிகச் சிறந்த ராணுவத்தைக்கொண்ட அமெரிக்கா இப்போது களைத்துப்போய், அதே தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். உலகெங்கும் இதே நிலைதான்!

ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தி சில நாள்களில் வீழ்த்திவிடும் அளவுக்கு பாகிஸ்தான் சிறிய தேசம் அல்ல. இரண்டு நாடுகளுக்கு இடையிலான எல்லையும் சிக்கலானது. பனிமலைகளும் அடர்காடுகளும் கொண்ட இந்த எல்லையில் நடக்கும் சண்டை பல மாதங்கள்கூட நீடிக்கலாம். அது மீளமுடியாத பொருளாதாரச் சுமையை ஏற்படுத்திவிடும். ஒரு வெள்ளம் வந்தாலே பால் பாக்கெட்டும் மெழுகு வர்த்தியும்கூட கிடைக்கப்பெறாத ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில் வாழ்ந்து கொண்டு ‘போர்... போர்’ என்று சிலிர்ப்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனம்.

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரண்டு தேசங்களுக்கு இடையே நேரடிப் போர் இதுவரை ஏற்பட்டதில்லை. அப்படி ஒரு போர் நடந்தால், அது ஆயுத வியாபாரிகளின் மோதலாகவே உருவெடுக்கும். அமெரிக்காவின் எஃப் 16 விமானங்கள், சீனாவின் புதிய தயாரிப்புகள், பிரான்ஸின் டஸோ நிறுவனத் தயாரிப்புகள், ரஷ்யாவின் சுகோய் விமானங்கள் ஆகியவற்றில் எது சிறந்தது என்ற விவாதம் நீண்ட காலமாக நிலவுகிறது. இதற்கான பரிசோதனைக் களமாக நம் மண்ணை மாற்றிவிடக் கூடாது. ‘போர் தொடங்கினால், அதை நிறுத்துவது என் கட்டுப்பாட்டிலோ, மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது’ என்று இம்ரான் கான் சொன்ன வார்த்தைகள் மிகுந்த அர்த்தமுள்ளவை.

இப்போது பாகிஸ்தானில் நுழைந்து தாக்கியதன் மூலம், ‘இனி எப்போது இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும், அந்தத் தீவிரவாதிகளை முறியடிக்க பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழைந்து தாக்கும்’ என்ற உரிமையைச் சர்வதேச லைசென்ஸ்போல பெற்றிருக்கிறது இந்தியா. போரில் இறங்கினால், இந்த உரிமை நம்மிடமிருந்து பறிபோய்விடும். பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு என்பதற்காக பாகிஸ்தான்மீது போர் தொடுக்கவில்லை அமெரிக்கா. அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை அழிக்கும் உரிமையை அது எப்போதும் பெற்றிருக்கிறது. இந்தியாவும் அப்படி இருப்பதே எதிர்காலத்துக்கு நல்லது.

உலகின் 57 இஸ்லாமிய நாடுகள் இணைந்து ‘இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பு’ என்று ஒன்றை வைத்துள்ளன. பாகிஸ்தான் எதைச் செய்தாலும் இது கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும். இந்த அமைப்பு, தன் வரலாற்றில் முதல்முறையாக இப்போதுதான் இந்தியாவைத் தன் கூட்டத்துக்கு அழைத்துள்ளது. இந்தக் கூட்டமைப்பில் ஆதரவு திரட்டி, பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த சரியான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. போரில் இறங்கினால் இது சாத்தியப்படாது.

பாகிஸ்தானின் தீவிரவாத முகத்தைச் சர்வதேச அளவில் அம்பலப்படுத்தி, அந்த நாட்டைத் தனிமைப்படுத்துவதே போரைவிட சிறந்த வழி. கூடவே, நம் உளவு அமைப்பையும், தீவிரவாதத் துக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்த வேண்டும். ‘ஒற்றை மரணம் துயரமானது. ஆனால், பத்து லட்சம் பேர் மரணம் என்பது வெறும் புள்ளிவிவரம்’ என்று போர் பற்றி ரஷ்யாவில் ஸ்டாலின் சொன்ன புகழ்மிக்க வாசகம் நினைவுக்கு வருகிறது. பாலஸ்தீனம், ஈராக், சிரியா, சூடான் என்று தினம் தினம் செய்திகளில் ‘புள்ளிவிவர’ங்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம். அந்தப் ‘புள்ளிவிவரங்களாக நாமும் மாறிவிடக்கூடாது.

தி.முருகன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி