சர்வதேச அளவில் உற்றுக் கவனிக்கப்படும் இந்திய - பாகிஸ்தான் பரஸ்பரத் தாக்குதல் விவகாரத்தில், வெளிவராத சில விஷயங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து பேசும் மத்திய உளவுத் துறையின் அதிகாரிகள் சிலர், “இந்திய விமானப் படையின் தாக்குதல், மொத்தம் ஏழு பேருக்கு மட்டுமே தெரிந்து நடைபெற்றது. தேசம் முழுவதும் பாராட்டப்பட்டாலும், இந்தத் தாக்குதலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை” என்கிறார்கள்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை நடத்திய துல்லியத் தாக்குதலில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்திய அரசு இதுவரை இதை உறுதிசெய்யவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சிலர், “புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. ஆனால், ‘உடனடியாக எதிர்த் தாக்குதல் தொடுக்க வேண்டாம்; ஆலோசித்து முடிவு எடுப்போம்’ என்று பிரதமர் அலுவலகம் நினைத்தது. இதுதொடர்பாக, தன் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் ஐ.பி அதிகாரியுமான தோவலிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஜெய்ஷ்-இ-முகமதுவின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயிற்சி மையங்கள் குறித்த தகவல்கள் இந்திய உளவு நிறுவனமான ‘ரா’விடம் கேட்கப்பட்டன. மறுபுறம், இஸ்ரோவிடம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி மையங்கள் தொடர்பாக சாட்டிலைட் படங்கள் பெறப்பட்டன. அதன் பிறகு, பிப்ரவரி 18-ம் தேதி இரவு பிரதமர் மோடியின் வீட்டில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முப்படைத் தளபதிகள், ‘ரா’ உயர் அதிகாரி, ஐ.பி தலைவர் உட்பட ஏழு பேர் மட்டுமே கலந்துகொண்டனர். அப்போது பிரதமர், ‘ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது சாத்தியமா?’ என முப்படைத் தளபதிகளிடம் கருத்து கேட்டுள்ளார். தரைப்படை தளபதி ராவத், ‘எல்லை ஓரத்தில் நம் படைகளை முதலில் குவித்துவிட்டு, வான்வழியாகக் குறிப்பிட்ட இலக்கைத் தாக்குவது சிறந்தது” என்று சொல்ல, அதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

அதேநேரம், பாகிஸ்தான் திருப்பித் தாக்கினால் சமாளிக்கும் வகையில், குஜராத் கடற்பகுதியில் கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்த முடிவுசெய்யப்பட்டது. தாக்குதலுக்காக நாள் குறிக்கப்பட்டது. 26-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானங்கள் எல்லையைக் கடந்து பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்தன. பாகிஸ்தானின் பாலக்கோட் குன்றுதான் இலக்கு. இஸ்ரோ கொடுத்த வரைபடத்திலும் அதுதான் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு நேரம் என்பதால், சரியான இலக்கைக் குறிவைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால், குன்றுக்கு அருகில் இருந்த வனப்பகுதியில் மூன்று குண்டுகள் மட்டுமே வீசப்பட்டன. உடனடியாக இந்திய விமானங்களும் திரும்பிவிட்டன.

இதைத் தொடர்ந்து, அல் ஜசீரா தொலைக்காட்சியின் பாகிஸ்தான் செய்தியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றார்கள். ‘இந்திய விமானங்கள் குண்டு வீசியது தீவிரவாதிகளின் முகாம்கள்மீது அல்ல; வனாந்திரப் பகுதி’ என்று தங்கள் தொலைக்காட்சியில் வீடியோ ஆதாரங்களுடன் ஒளிபரப்பினர். இதுதொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும், சம்பவ இடத்தை வந்து பார்வையிடும்படி சர்வதேசப் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதனாலே, இது ஒரு வெற்றிகரமான தாக்குதல் என்பதை இந்தியாவால் சொல்லிக்கொள்ள முடியவில்லை. தவிர, இந்திய விமானப்படை குறிவைத்த தீவிரவாதிகளின் முகாம்கள் ஒரு வாரத்துக்கு முன்பே இடம் மாறிவிட்டன. அந்தத் தகவலும் தாக்குதல் நடந்து முடிந்த பிறகே இந்திய உளவுத்துறைக்குக் கிடைத்தது” என்றார்கள்.

இதுகுறித்து பி.ஜே.பி-யின் டெல்லி தலைமையக நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரியிடம் பேசினோம். “சில விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியாது. ஆனால், 1971-க்குப் பிறகு, நமது போர் விமானங்கள் முதன்முதலாக இந்திய எல்லையைத் தாண்டிச் சென்று குண்டு மழை பொழிந்துள்ளன. பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான், இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு உள்ளானால் அடியோடு அழிந்துபோய்விடும் என்பதைப் பிரதமர் மோடி புரியவைத்துள்ளார். மும்பை தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பாகிஸ்தான்மீது விமானப்படைத் தாக்குதல் நடத்த அனுமதி கேட்டபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கவில்லை. ஆனால், புல்வாமாவில் இறந்த நம் வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில், மோடியின் அரசு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது” என்றார்.