Published:Updated:

ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி

ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி
பிரீமியம் ஸ்டோரி
ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி

ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி

ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி

ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி

Published:Updated:
ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி
பிரீமியம் ஸ்டோரி
ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் காங்கிரஸையும் பி.ஜே.பி-யையும் விட்டால் வேறு வழியில்லாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழகத்திலும் நிலைமை அப்படித்தான். ‘தி.மு.க-வை விட்டால் அ.தி.மு.க.’, ‘அ.தி.மு.க-வை விட்டால், தி.மு.க.’ அரசியலில் நம் மக்களுக்கு வேறு மாற்று இல்லை என்பதுதான் நம் தேசத்தின் பிரச்னை. எதற்காக இந்தப் பீடிகை என்கிறீர்களா? போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளின் அருகிலிருக்கும் ஐரோப்பிய யூனியன் நாடான ஸ்லோவாக்கியாவில் ஓர் ஆண்டுக்கு முன்பு அரசியலுக்கு அறிமுகமான பெண் ஒருவர், முப்பது ஆண்டுகாலமாக கோலோச்சிய அரசியல் கட்சியை மண்ணைக்கவ்வ வைத்து, முதல் பெண் அதிபராகவும் பதவி ஏற்றுள்ளார்! 

ஸ்லோவாக்கியாவில், அசுர பலத்தோடு ஆட்சி செய்த கட்சி ஸ்மெர். சுமார் 30 ஆண்டுகாலமாகக் கோலோச்சிய அரசியல் கட்சியை, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தோற்கடித்து, அதிபராகியிருக்கிறார் சுஸானா காபுடோவா. முற்போக்கு சிந்தனைவாதியும் சுற்றுச்சூழல் போராளியுமான இவர், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய ஸ்மெர் கட்சியின் வேட்பாளரைப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் (58 சதவிகிதம்) வென்றுள்ளார்.

அடிப்படையில் சுஸானா ஓர் அரசியல்வாதி இல்லை. எந்தக் கட்சியிலும் அவர் உறுப்பினராகக் கூட இருந்ததில்லை. வக்கீலாகத் தன் பணியைச் சொந்த ஊரான ப்ராட்டிஸ்லாவா நகரில் செய்துவந்தார். கடந்த 1999-ல் ஒரு பன்னாட்டுத் தனியார் நிறுவனம் ப்ராட்டிஸ்லாவா நகரை நச்சுக் கழிவைக்கொட்டும் குப்பைத்தொட்டியாக மாற்றியபோது, வெகுண்டெழுந்து போராடினார். 14 ஆண்டுகள் அவர்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி, வெற்றியும் பெற்றார். இவரது சட்டப் போராட்டம், அந்நிறுவனத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான கொஸ்னெரை சிறையில் அடைத்தது.

ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுஸானாவுக்குப் பொது வாழ்வில் கிடைத்த முதல் வெற்றி இதுதான். கடந்த 2016-ல் சான்ஃப்ரான்ஸிஸ்கோ பல்கலைக்கழகம் இவரது சூழல் போராட்டத்தைப் பாராட்டி விருது வழங்கிக் கௌரவித்தது. இந்நிலையில், ஸ்லோவாக்கியா அரசியல்வாதிகளுக்கும், இத்தாலி மாஃபியாக்களுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய 27 வயது பத்திரிகையாளர் ஜான் குசியாக், அவரது வருங்கால மனைவி மார்டினா குஸ்னிரோவா ஆகியோர் கடந்த 2018, பிப்ரவரியில் ஒரு மாஃபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைதான் சுஸானாவை அரசியலுக்கு இழுத்துவந்தது. பெரும் புரட்சிக்கு இணையாக நடந்த இப்போராட்டத்தில் குதித்தார் சுஸானா. போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் ராபர்ட் ஃபிகோ பதவி விலகினார். ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் வந்தது.

தேர்தலுக்குச் சில காலம் முன்புதான், லிபரல் முற்போக்கு ஸ்லோவாக்கிய கட்சியில் இணைந்தார் சுஸானா. அக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர்கூட இல்லை. இருப்பினும் தைரியமாகக் களத்தில் குதித்தார் சுஸானா. ஊழலுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். ‘இந்தத் தேர்தல் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம்’ என்று வெடித்தார். ‘‘முப்பது ஆண்டுகளாகக் கொண்டுவர முடியாத மாற்றத்தைக் கொண்டுவந்தவர் சுஸானா. பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரதமராக இருந்த இவெடா ராடிகோவால்கூட ஊழலுக்கு எதிராக இந்த அளவுக்கு மக்களைத் திரட்டமுடியவில்லை’’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

சுஸானாவை எதிர்த்துப் போட்டியிட்ட மாரோஸ் செஃப்கோவிக் சாதாரணமான நபர் இல்லை. உலக அளவில் புகழ்பெற்ற ராஜதந்திரி; ஸ்லோவாக்கிய மிஷனின் முன்னாள் தலைவர்; ஐரோப்பிய ஆணையத்தின் உப தலைவர். ஆனால், தான் போட்டியிட்ட முதல் தேர்தலில், அவரை மண்ணைக் கவ்வவைத்தார் சுஸானா.

வெற்றி குறித்துப் பேசிய சுஸானா, “அரசியலில், பொருளாதார சக்திகளின் திமிரையும், மோசமான தன்மையையும், என்னால் பார்க்கமுடிந்தது. எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தனிப்பட்டத் தாக்குதல்களைச் சகித்துக்கொள்ளவும் அது கற்றுக்கொடுத்தது. அரசியலில் நீதியும் நேர்மையும் பலவீனமானது என்று பலரும் நினைத்திருக்கலாம். ஆனால், அதுதான் உண்மையான பலம் என்று இன்று உறுதியாகியுள்ளது’’ என்கிறார்.

சுஸானாவின் இமாலய வெற்றி, ஸ்லோவாக்கியாவில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்!

- கே.ராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism