Published:Updated:

`சவுதிக்கு அணு ஆயுதம் கொடுக்காதீங்க, ஆபத்து’- டிரம்ப் முயற்சிக்குத் தடைபோடும் அதிகாரிகள்

`சவுதிக்கு அணு ஆயுதம் கொடுக்காதீங்க, ஆபத்து’- டிரம்ப் முயற்சிக்குத் தடைபோடும் அதிகாரிகள்
`சவுதிக்கு அணு ஆயுதம் கொடுக்காதீங்க, ஆபத்து’- டிரம்ப் முயற்சிக்குத் தடைபோடும் அதிகாரிகள்

சவுதிக்கு அமெரிக்கா அணு ஆயுத தொழில்நுட்பத்தைக் கொடுக்க அவசரப்படுவதாக அமெரிக்க காங்கிரஸின் ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.  

சவுதி கச்சா  எண்ணெய் வளம் கொழிக்கும் நாடு என்றாலும் அங்கு அணு ஆயுத தொழில்நுட்பம் இல்லை. சில நாள்கள் முன்னர் சவுதி தலைநகர் ரியாத்திலிருந்து 230 கி.மீ. துாரத்தில் உள்ள அல்டவாட்மி என்னும் நகரில் ஏவுகணை தயாரிப்பு சோதனை மையம் இருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. உலக நாடுகள் இந்தச் செய்தியால் அதிர்ச்சிக்குள்ளாகின.

இந்த நிலையில், அமெரிக்க காங்கிரஸ் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, நாட்டின் தொழில்நுட்ப இடமாற்றங்களுக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை மீறி, ஆணு ஆயுத தொழில்நுட்பத்தை  சவுதிக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாம்.  அமெரிக்க காங்கிரஸின் கருத்தை புறக்கணித்துவிட்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ட்ரம்ப் அரசு அவசரம் காட்டி வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

`சவுதியிடம் இந்தத் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டால் அணு ஆயுதங்களை தயாரிக்க நேரிடும். இது மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பகையுணர்வை அதிகரிக்கும். மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும்’ என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையில் உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் சிலருக்கே இதில் விருப்பம் இல்லை என்பதால் இந்த தொழில்நுட்ப இடமாற்ற செய்தியை கசியவிட்டுள்ளன. ஏமன் போர், பத்திரிகையாளர் ஜமால் படுகொலை என சவுதி இளவரசர் சல்மான் செயல்பாடுகள் மீது உலக நாடுகள் அதிருப்தியில் இருக்கையில் அமெரிக்கா அரசு அணு ஆயுத தொழிநுட்பத்தைக் கொடுக்க அவசரம் காட்டுவது ஆபத்தானது என அமெரிக்க பத்திரிகையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.