பிரிட்டன் நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளாக இழுபறியாக இருக்கும் ‘பிரெக்ஸிட் ஒப்பந்தம்’, பிரிட்டன் பிரதமர் ‘தெரீசா மே’யின் பதவியைக் காவு வாங்கியுள்ளது. தெரீசா மே-யின் பதவி பறிபோவதற்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியோ, பிரிட்டன் மக்களோ காரணம் இல்லை. மே-யின் சொந்தக் கட்சியான கன்சர்வேடிவ் (டோரி) கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்த கலகம்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்காகச் செய்துகொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தம்தான் பிரெக்ஸிட். ‘பிரிட்டன் எக்ஸிட்’ என்பதுதான் சுருக்கமாக பிரெக்ஸிட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்துக்குத் தெரசா மே-யால், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. அதனால், ‘வருகிற ஜூன் 7-ம் தேதி பதவி விலகிக்கொள்கிறேன்’ என்று கண்ணீர் சிந்த அறிவித்திருக் கிறார் தெரசா மே. எதிர்க் கட்சிக்காரர்கள், பிரிட்டன் மக்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவிக்கும் இந்த ஒப்பந்தத்துக்கு அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருப்ப தால்தான் இம்முடிவை எடுத்திருக் கிறார், மே. கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகுகிறார்.

சொந்தக் கட்சியினரின் எதிர் நடவடிக்கை களால் பதவி விலகும் இரண்டாவது பிரதமர் தெரசா. 30 ஆண்டுகளுக்கு முன், இதே கன்சர்வேடிவ் கட்சியினரின் நன்றிகெட்ட செயல்களால் கண்ணீர் சிந்தியபடி பதவியிலிருந்து வெளியேறினார், பிரிட்டன் நாட்டின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர்.

கடந்த 1975-ம் ஆண்டிலிருந்து கட்சித் தலைவராகவும் 1979-ம் ஆண்டிலிருந்து 1990-ம் ஆண்டுவரை பிரதமராகவும் இருந்தவர் தாட்சர். தாட்சர் பதவி விலகியபோது, ‘அவருக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக் கூடாது’ என பிரிட்டன் மக்கள் பிரார்த்தித்தனர். அதே நிலைமைதான் தற்போது மே-வுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு, ஐரோப்பாவில் ஒற்றை நாணய (யூரோ) அமைப்பை அறிமுகப்படுத்தியது ஐரோப்பியப் பொருளாதார கவுன்சில். அதில், பிரிட்டன் இணைவதை எதிர்த்ததால்தான் தாட்சரை கட்சித்தலைவர் பதவி யிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந் தும் தூக்கி வீசினர், கன்சர்வேடிவ் கட்சியினர்.

சமீபத்தில், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பொருளா தாரச் சரிவின் தாக்கம் அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் பாதித் தது. ஆனால், பிரிட்டனுக்குக் கடுமையான பாதிப்புகள் இல்லை. அதற்குக் காரணம், 30 ஆண்டுகளுக்கு முன் தாட்சர் எடுத்த முடிவுதான். தாட்சர், அன்று அதிருப்தியாளர்களின் பேச்சைக் கேட்டிருந்தால், இன்று பிரிட்டன் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். ‘தாட்சரின் தீர்க்கமான முடிவும், தியாகமும் இன்றுவரை பிரிட்டனின் பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக் கின்றன’ என்று பெருமைப்படுகிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.

இரு பிரதமர்களின் அரசியல் வாழ்வை வீழ்த்திய ஒரே அஸ்திரம், ஐரோப்பா என்பதுதான் விசித்திரம். ஐரோப்பிய கவுன்சிலுக்குள் பிரிட்டன் நுழைவதில் ஏற்பட்ட பிரச்னையால் தாட்சர் பதவி இழந்தார். ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து வெளியேறுவதில் ஏற்பட்ட பிரச்னை யால், மே பதவி இழந்துள்ளார். காலங்காலமாக, பிரிட்டன் பிரதமர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே ஐரோப்பா இருக்கிறது.

தாட்சருக்குப் பிறகு சீரழிந்து கிடந்த கட்சியைத் தூக்கி நிறுத்திய டேவிட் கேமரூன் 2015-ம் ஆண் டில் பிரதமரானார். கேமரூன், பிரெக்ஸிட்டுக்கு எதிரான மனநிலை கொண்டவர். அதே நேரத்தில், மக்களின் மனநிலையை அறிய, 2016-ம் ஆண்டில், பிரெக்ஸிட் மீது பொது வாக்கெடுப்பு நடத்தினார். ‘வெளியேற வேண்டும்’ எனப் பெரும்பாலானோர் வாக்களித்ததால், பதவி விலகினார் கேமரூன். அவருக்குப் பிறகு பிரதமரான மே, தன் பதவிக் காலத்தின் பெரும் பகுதியை இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்குத்தான் செலவழித்தார். ஆனால், அவரின் வர்த்தக ஒப்பந்த முன்மொழிவுகள் பிரிட்டன் நாடாளு மன்றத்தில் மூன்று முறை நிராகரிக்கப்பட்டன. அவர் கொண்டுவந்த திருத் தங்களையும் கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கவில்லை. பதவி விலகல், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என அமைச்சர்கள் நெருக்கடிகள் கொடுத்ததோடு, ‘வர்த்தகச் சீரமைப்பு முன்மொழிவு கள் அதிகம் விட்டுக்கொடுப்பதாக இருக்கிறது. மே, உறுதியாகச் செயல் படவில்லை’ என்று குற்றம்சாட்டினர். அதனால்தான் மனமுடைந்தார், மே.

போராட்டக் குணம் படைத்த வரான மே, பிரிட்டன் உள்துறையில் ஆறு ஆண்டுகள் செயலராகப் பணி யாற்றியிருக்கிறார். மிகவும் சவாலான பதவி அது. கடந்த 2016-ம் ஆண்டில் போட்டியின்றி பிரதமரானார், மே. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், கன்சர் வேடிவ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத தால், ‘அயர்லாந்து ஜனநாயக யூனியன் கட்சி’யுடன் கூட்டணி அமைத்துப் பிரதமரானார். அந்தக்கட்சியும் பிரெக்ஸிட்டை எதிர்த்து வருகிறது.

பிரிட்டன் வெளியேற்றம் சுமுகமாக இருக்க வேண்டும் எனப் பாடுபட்ட பிரதமர்கள் இப்படிப் பதவி இழப்பதால்… ‘பிரிட்டன் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறிவிடும் சூழல் உருவாகிவிடுமோ’ என்று அஞ்சுகிறார்கள், பலரும்.

எதுவாக இருந்தாலும் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் பிரிட்டன் வெளியேறியாக வேண்டும். இனி, பிரெக்ஸிட் என்றால், இரு பிரதமர்கள் வடித்த கண்ணீர்தான் நினைவுக்கு வரும்; கன்சர்வேடிவ்களின் துரோகமும்கூட!

- கே.ராஜு