Published:Updated:

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Published:Updated:
இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

ஒரு சில மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்பட்டாலே கவுன்சிலர் தொடங்கி பிரதமர் வரை திட்டித் தீர்ப்போம். ஆனால், கடந்த 6 நாள்களாகவே ஒரு நாடே மின்சாரம் இல்லாமல் திண்டாடி வருகிறது. ஒரு காலத்தில் எண்ணெய் வளம் கொழித்த லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில்தான் இப்படியொரு நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை நீடிக்கிறது.

வெனிசுலா தலைநகர் கராகஸில் விட்டு விட்டு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஆனாலும் நாட்டின் பிற இடங்களில் மின்வெட்டு தொடர்கிறது. பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் செய்ய முடியாமல் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நிருபர்கள் செய்தி சேகரிக்க கிழக்கு கராகஸுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு வயதான பெண்மணி வேப்பமரத்து இலைகளைப் பறித்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று எதற்காக இந்த இலைகள் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அந்தப் பெண், ``ஆறு நாள்களாக மின்சாரம் இல்லை. நான் சுகர் பேஷண்ட். ஃப்ரிட்ஜில் வைத்திருந்த இன்சுலின் மருந்து மின்சாரம் இல்லாமல் கெட்டுப் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. மருத்துவமனைகளிலும் ஸ்டாக் இல்லை. வேப்பமரத்து இலைகளை சாப்பிட்டால் சக்கரை அளவு கட்டுக்கோப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் வேப்ப மரத்து இலைகளைப் பறிக்கிறேன்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னும் சிலர் சாலையில் குழுவாக அமர்ந்து ஜெனரேட்டர்  மூலமாக செல்போன் சார்ஜ் ஏற்றிகொண்டிருந்தனர். அவர்களிடம் நிருபர்கள் பேச்சு கொடுத்தனர், `ஒருவர் வீட்டில் மட்டும்தான் ஜெனரேட்டர் இருக்கிறது. அதற்குத் தேவையான எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் கள்ளச் சந்தையில் எரிபொருள் வாங்கி நாங்கள் அனைவரும் இந்த ஒரு ஜெனரேட்டர் மூலம் வீடுகளுக்கு இரவில் மட்டும் மின்சாரம் வரும்படி செய்திருக்கிறோம். அரசு இதை திருட்டுத்தனம் என்று சொல்லலாம். ஆனால், இது எங்களின் பிழைப்பதற்கான வழி. சர்வைவல் என்று சொல்லலாம். மின் வெட்டு பற்றி மக்களிடம் ஊடகம் வாயிலாகப் பேசிய அதிபர் மதுரோ, `இது எல்லாத்துக்குமே அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் காரணம்' என்று சொன்னார். ஆனால் எங்களுக்குத் தெரியும் இது மின் நிலையங்கள் பராமரிப்பில், போதுமான முதலீடு செய்யாததால் ஏற்பட்ட மின்வெட்டு’’ என்றனர்.

முதியவர் ஒருவர் அங்கிருந்த வீடுகளுக்கு பார்சல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அது பற்றி நிருபர்களிடம் பேசிய அவர், ``இது உப்பில் ஊறவைத்து காயவைத்த மாட்டிறைச்சி. கோழிக்கறி, மீன் போன்ற உணவுப் பொருள்கள், குளிர்சாதனப்பெட்டி வேலை செய்யாததால் கெட்டுப் போய்விட்டது. ஆனால், இது கெட்டுப் போகாது. அதனால்தான் அனைவருக்கும் கொடுக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

மனிதர்கள் எல்லா நெருக்கடியான சூழலிலும் தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள் என்பதற்கு வெனிசுலா மக்கள் ஒரு உதாரணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism