Published:Updated:

``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்!" - இந்தியாவுக்கு சீனா சவால்

``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்!" - இந்தியாவுக்கு சீனா சவால்
``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்!" - இந்தியாவுக்கு சீனா சவால்

``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்!" - இந்தியாவுக்கு சீனா சவால்

சீனப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு இந்தியாவில் சமீப காலமாக குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ``உங்களால் முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்" என இந்தியாவுக்கு சீனா சவால் விடுத்துள்ளது. 

``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்!" - இந்தியாவுக்கு சீனா சவால்

கடந்த பிப்ரவரி மாதம், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதுவின் தலைவர் மசூத் அசாரை, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மசூத் அசாரை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் ஆயுதத் தடை, பயணத் தடை, சொத்துகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அந்நாடுகள் திட்டமிட்டிருத்தன

ஆனால், பாகிஸ்தானைத் தனது பிடியில் வைத்துள்ள சீனா இதற்கு முட்டுக்கட்டைப் போட்டுவிட்டது.  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடந்தபோது சீனா வழக்கம் போல் அதற்குத் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து விட்டது. ஏற்கெனவே கடந்த 3 முறை இந்தியா, மசூத் அசாரின் பெயரை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் வைக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோதும் சீனா தடுத்து வந்தது. தற்போது 4-வது முறையாக மசூத் அசார் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு முட்டுக்கட்டை போட்டுள்ளது. 

இதனால், சீனாவின் இறக்குமதி பொருள்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டின் பொருள்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் சுதேசி விரும்பிகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் இது குறித்து பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில், ``உங்களால் முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்" என சீன ஊடகங்கள் இந்தியாவுக்குச் சவால் விடுத்துள்ளன. சீன ஊடகங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதில் வெளியிடப்படும் கருத்து, அரசின் கருத்தாகவே கருதப்படும். 

அப்படி ஒரு கருத்துதான் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் `குளோபல் டைம்ஸ்'  என்ற பத்திரிகை, ``ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கச் செய்யும் இந்தியாவின் சமீபத்திய முயற்சி சீனாவால் வெற்றி பெறாமல் போனதால், சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களைப் புறக்கணிக்குமாறு இந்தியாவில் சிலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது தொடர்பான ``#BoycottChineseProducts" என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டானது. ஆனால், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் ஏன் தோல்வியடைகின்றன? ஏனெனில் இந்தியாவால் தனக்குத் தேவையான பொருள்களை தானே தயாரிக்க முடியாது. 

``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்!" - இந்தியாவுக்கு சீனா சவால்

அவர்கள் ( இந்தியா) விரும்புகிறார்களோ இல்லையோ, அவர்கள் இன்னும் சீனாவில் தயாரிக்கும் பொருள்களைத்தான் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால், இந்தியாவுக்குப் பெரிய அளவில் தனக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்க இயலாது. இந்தியாவுக்குள் இருக்கும் சில சக்திகள் அந்த நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தி வருகின்றன" என்று எழுதியுள்ளது. 

மேலும் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு, ``இந்திய அரசியல்வாதிகள் ஓட்டுகளைப் பெறுவதற்காக சீனாவின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது" என்றும் அப்பத்திரிகை எழுதியுள்ளது. 

இந்தியா இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய மக்களின் கவனத்தை சீனா நோக்கித் திருப்பி விடுவதால் அதன் உள்நாட்டு பிரச்னைகள் இன்னும் தீவிரமடையத்தான் செய்யும்.

இந்தியா - சீனா இடையேயான உறவில் சமீப ஆண்டுகளாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தேசியவாத உணர்வை அதிகரிப்பதற்காகவும், புகழ் பெறுவதற்காகவும் வேட்பாளர்கள் சீன வெறுப்பு பிரசாரத்தைச் செய்தால் அது ஆபத்தில் முடிந்து விடும். சீன விவகாரங்களை உணர்வுபூர்வமாக்கினால் அரசியலில் ஆதாயம் பெற உதவலாம். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தையோ, உற்பத்தியையோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்தையோ மேம்படுத்த அது உதவாது" என்று எச்சரித்துள்ள அந்தப் பத்திரிகை, ``இந்திய அரசியல்வாதிகள் வெறுமனே ட்விட்டரில் கோஷங்களை எழுப்புவதற்குப் பதிலாக நாட்டின் உண்மையான பலத்தை மேம்படுத்த முன்வரவேண்டும்" என்று அறிவுறுத்தியும் உள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு