Published:Updated:

மோடி வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்பு: இம்ரான் கான் நம்பிக்கை!

பா. முகிலன்
மோடி வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட  வாய்ப்பு: இம்ரான் கான் நம்பிக்கை!
மோடி வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்பு: இம்ரான் கான் நம்பிக்கை!

'இந்தியாவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது' என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

மோடி வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட  வாய்ப்பு: இம்ரான் கான் நம்பிக்கை!

பாகிஸ்தானில் பணியாற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்த அவர், " ஒருவேளை, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான  கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே அவர்கள் அச்சப்படுவார்கள். 

மோடி ஆட்சியில் காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களும், இந்தியாவின் பிற பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களும் பெருமளவில் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன்.  ஆனாலும், வரவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதோடு, காஷ்மீர் குறித்த பிரச்னைக்குத்  தீர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்தியாவில்,  தற்போது நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது, இப்படி நடக்கும் என நான் நினைத்துப்பார்த்ததே இல்லை. இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்கள். 

பல ஆண்டுகளுக்கு முன்னர்,  இந்தியாவில் வசித்த இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், தற்போதைய தீவிர இந்து தேசியத்தால், அவர்களது நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. 

இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவைப் போன்று தேசியவாதம் மற்றும் அச்ச உணர்வைக் கிளப்பி தேர்தல் பிரசாரம் செய்கிறார்.  மேலும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்துவந்த, 'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370-வது அரசியல் சாசனப் பிரிவை நீக்க வலியுறுத்தப்படும்' என பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் மிகக் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. 

மோடி வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட  வாய்ப்பு: இம்ரான் கான் நம்பிக்கை!

பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் அகற்றுவதில் இஸ்லாமாபாத் உறுதியாக உள்ளது. இது விஷயத்தில், பாகிஸ்தான் ராணுவம் அரசுக்கு முழு ஆதரவை அளித்துவருகிறது. காஷ்மீரில் நடப்பது அரசியல் போராட்டம். அதற்கு ராணுவம்மூலம் தீர்வு காண முடியாது. பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள், எல்லை தாண்டி காஷ்மீருக்குள் புகுந்தால், அது இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு வழி வகுக்கும். இதனால், இறுதியாகப்  பாதிக்கப்படப்போவது காஷ்மீர் மக்கள்தான்" என்று கூறினார்.