Published:Updated:

இராக் பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட  பிணக் குவியல்! - பின்னணியில் சதாம் உசேன் #Shocking

இராக் பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட  பிணக் குவியல்! - பின்னணியில் சதாம் உசேன் #Shocking
இராக் பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட  பிணக் குவியல்! - பின்னணியில் சதாம் உசேன் #Shocking

இராக்கின் சமாவா நகருக்கு மேற்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாலைவனத்தில், மனித எலும்புக்கூடுகளின் குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட உடல்கள் அவை. 


 

``சதாம் உசேன் செய்த கொடுமைகளை இராக் மக்கள் மறந்துவிட மாட்டார்கள். சமாவா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  பிரேதக் குழியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு  சதாம் படையால் கொலைசெய்யப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறது’’  என ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி, மக்களிடையே பேசியுள்ளார்.

1973-ம் ஆண்டு, அமெரிக்க ஆதரவுடன் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களை (அவர்களும் முஸ்லிம்கள்தான்) வேட்டையாடிக் கொன்றது சதாமின் ஆட்சி.  சதாம் உசேன் 1979ல் இருந்து 2005 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் ஈராக் அதிபராக இருந்தார்.  அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், சர்வாதிகார அரசாங்கத்தை நடத்தினார். சதாமின் ஆட்சியில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்தது. மனித உரிமை மீறல்கள் நடந்தன. சதாமின் படை,  ஆயிரக்கணக்கான குர்து இன மக்களைக் கொலைசெய்து குவித்தது.  1984-ம் ஆண்டு,  ஈரான் மீது ரசாயன ஆயுதம் ஏவினார் சதாம். இதனையடுத்து,  ஐ.நா இராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. அதோடு விடாத சதாம், 1988-ம் ஆண்டு சொந்த நாட்டின் குர்து இன மக்கள் மீதே ரசாயன ஆயுதங்களை ஏவினார் . லட்சக்கணக்கான அப்பாவி குர்து இன மக்கள் கொல்லப்பட்டனர். அந்தச் சமயத்தில் உயிரிழந்த குர்து இன மக்களின் உடல்கள்தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  இராக் அரசு தெரிவித்துள்ளது.   


 

சதாம் ஏவிய ரசாயன ஆயுதத் தாக்குதலில் உயிர்விட்ட லட்சக்கணக்கான குர்து இன மக்களின் உடல்கள் பாலைவனங்களில் பெரிய குழிகள் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டதாம். அதில் ஒரு பிரேதக் குழிதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



இந்தச் சம்பவம் பற்றி மக்களிடையே பேசிய  இராக் அதிபர் பர்ஹாம் சாலி, ``சதாம் உசேன் செய்த கொடுமைகளை இராக் மக்கள் மறந்து விட மாட்டார்கள்.  1980- களில் சதம் படையினர் குர்து இன மக்கள் வசிக்கும் கிராமங்களின்மீது ரசாயன குண்டு தாக்குதல் நடத்தினர். அதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கிராமங்கள் சீரழிந்தன. குர்து மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. நம் மக்களை சதாம், சமாவா பாலைவனத்தில் பெரிய பிரேதக்குழியில் புதைத்திருக்கிறார். அவரின் கொடுங்கோல் ஆட்சியை ஒருபோதும் மறந்துவிட முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.