Published:Updated:

தாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது! - ஐ.நா. அறிக்கை

தாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது! - ஐ.நா. அறிக்கை
தாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது! - ஐ.நா. அறிக்கை

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படை மற்றும் ஆப்கான் தேசியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட ஆப்கான் மக்கள்தான் அதிகம் என்ற அதிர்ச்சியான தகவலை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர்களுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ள சூழலில், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெறும் குண்டுவீச்சு மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்த எண்ணிக்கையை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.

தாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது! - ஐ.நா. அறிக்கை

அந்த அறிக்கையின்படி, ஆப்கான் ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டுத் தாக்குதலால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 305 ஆப்கான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை, தாலிபான் மற்றும் ஏனைய கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதலால் சுமார் 227 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஆக, அமைதியை நிலைநாட்டுவதாகக் கூறி முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகளால்தான் ஆப்கான் மக்களின் உயிருக்கு அதிக ஆபத்து என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதே அறிக்கையில், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான்களின் தற்கொலைப்படைத் தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்பட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

தாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது! - ஐ.நா. அறிக்கை

2001-ம் ஆண்டு நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்க ராணுவம், தாலிபான்களின் ஆட்சியை வீழ்த்தி, தங்களுக்குச் சாதகமான ஆட்சியைக் கொண்டுவந்தது. பத்தாண்டுகள் தேடலுக்குப்பின் 2011-ல் ஒசாமா பின்லேடனைக் கொன்றபின்னரும், ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கப் படை அங்கேயே தங்கிவிட்டது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றபின்னர், அமெரிக்க ராணுவத்தை திரும்பப்பெறுவது குறித்த பரிசீலனையில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஐ.நா. சபையின் அறிக்கை, அமெரிக்க ராணுவத்துக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது.