Published:Updated:

`இலங்கைக்கு விரைகிறதா இந்திய கறுப்பு பூனைப்படை?!'

`இலங்கைக்கு விரைகிறதா இந்திய கறுப்பு பூனைப்படை?!'
`இலங்கைக்கு விரைகிறதா இந்திய கறுப்பு பூனைப்படை?!'

`இலங்கைக்கு விரைகிறதா இந்திய கறுப்பு பூனைப்படை?!'

`இலங்கைக்கு விரைகிறதா இந்திய கறுப்பு பூனைப்படை?!'

டந்த ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட சில பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், 250-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்தச் சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர தேடுதல்வேட்டை, தொடர் விசாரணை என நூற்றுக்கணக்கானோரிடம் இலங்கை அரசு விசாரணை நடத்திவருகிறது.

இலங்கைக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இந்திய உளவு அமைப்பான ரா மற்றும் தேசியப் புலனாய்வு முகமை போன்றவையும் விசாரணையில் இறங்கியுள்ளன. இதுதொடர்பாக, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் பேசினோம். ``நிலைமை இங்கு சீராகவில்லை. தொடர்ந்து அதேநிலைதான் நீடிக்கிறது. சர்வதேச அளவில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் தாக்குதல் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக, ரம்ஜானுக்கு முன்னதாகத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படியான  சூழலால் மக்கள் மிகுந்த அச்சத்தோடுதான் உள்ளனர்'' என்றார். 

`இலங்கைக்கு விரைகிறதா இந்திய கறுப்பு பூனைப்படை?!'

இதுதொடர்பாக, அங்குள்ள இலங்கைப் பத்திரிகையாளர் ஸ்ரீகாந்திடம் பேசினோம். ``கைது நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்டர்போல் விசாரணையும் நடைபெற்றுவருகிறது. அதோடு, இந்திய பாதுகாப்புப் படையான கறுப்பு பூனைப்படை இலங்கை வரவுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. ஆனால், இங்குள்ள அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. `இதுபோன்ற பிற நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் இலங்கைக்குள் நுழைவது  நல்லதல்ல' என்று இங்குள்ள அரசியல்வாதிகள் எதிர்க் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதனால், அரசாங்கமும் இந்த விவகாரத்தில் யோசித்துவருவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது'' என்றார் 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு