Published:Updated:

உக்ரைன் போர் எதிரொலி: `170 கோடி மக்கள் வறுமைநிலைக்குத் தள்ளப்படும் அபாயம்..!' - ஐ.நா கவலை

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ( ட்விட்டர் )

உக்ரைன் போர் காரணமாக 170 கோடி மக்கள் பசி, பட்டினி மற்றும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் எதிரொலி: `170 கோடி மக்கள் வறுமைநிலைக்குத் தள்ளப்படும் அபாயம்..!' - ஐ.நா கவலை

உக்ரைன் போர் காரணமாக 170 கோடி மக்கள் பசி, பட்டினி மற்றும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

Published:Updated:
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ( ட்விட்டர் )

ஒட்டுமொத்த உலகமும் உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களையும் ரஷ்யப் படைகள் கொன்று குவித்து வருவதாக உக்ரைன், ரஷ்யாமீது தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. ஆனால், ரஷ்யா அதை மறுத்துவருகிறது. உயிர் பயத்தில் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்துகொண்டிருக்கின்றனர். போர் மேகம் சூழ்ந்து காணப்படும் உக்ரைனுக்கு, பல்வேறு உலக நாடுகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிகள் செய்துவருகின்றன.

இந்த நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இது தொடர்பாக செக் குடியரசு நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``உக்ரைன் போர் காரணமாக மனித இனத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான மக்கள் அல்லது 170 கோடி மக்கள் பசி, பட்டினி மற்றும் வறுமைநிலைக்கு தள்ளப்படுவார்கள்.

உக்ரைன் - ரஷ்ய போர்
உக்ரைன் - ரஷ்ய போர்

உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளும் கோதுமை, பார்லியை 30 சதவிகிதம் உற்பத்தி செய்கின்றன. குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த 45 நாடுகள் மூன்றில் ஒரு பங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடமிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கோதுமை மற்றும் சோளத்தின் விலை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 60 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளன. இது போன்ற சூழ்நிலையில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மேலும் பெருகுவதையும், ஏழைகள் வறுமையில் விழுவதைத் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism