Published:Updated:

கனடா நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் 17 இந்திய வம்சாவளிகள்; ஜனநாயக கட்சித் தலைவராக ஜக்மீத் சிங் சாதனை!

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுடன், புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் உட்பட 17 இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த திங்கள் கிழமை வெளியான தேர்தல் முடிவுகளில் லிபரல் கட்சி வென்றிருந்தாலும் தனிப் பெரும்பான்மை பெறத் தவறியது.இந்திய வம்சாவளி அமைச்சர்கள் ஹர்ஜித் சஜ்ஜன், அனிதா ஆனந்த் மற்றும் பார்டிஷ் சாகர் ஆகியோரைப் போல 42 வயது என்டிபி தலைவர் ஜக்மீத் சிங்கம் பர்னாபி தெற்கில் நின்று 40% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்ட அவர் முதல் வெள்ளையர் அல்லாத கட்சித் தலைவராக சாதனை படைத்தார். திங்கள் கிழமை இரவு அவர் அளித்த உரையில் "புதிய ஜனநாயக கட்சியினர் உங்கள் மீது அக்கறையுடன் பாதுகாப்பார்கள் என்று நீங்கள் நம்பலாம். தொற்று நோய் பரவிய காலத்தில் நாங்கள் மக்களுக்காக உழைத்தோம். உங்கள் கடினமான நேரங்களில் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்" என்று கூறினார். கடந்த முறை பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹர்ஜித் சஜ்ஜன் வான்கூவர்-தெற்கிலிருந்து 49% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். லிபரல் கட்சியின் அனிதா ஆனந்த் 46% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக இருந்தவர்.

அனிதா ஆனந்த்
அனிதா ஆனந்த்

லிபரல் கட்சியினர் மொத்தம் 158 இடங்களைப் பெற்றனர். தனிப் பெரும்பான்மை அமைக்க 12 இடங்கள் குறைவு. கன்சர்வேட்டிவ் பார்டி (பழமைவாத கட்சி) 119 இடங்கள் பெற்றனர் இது 2019-ம் ஆண்டு அவர்கள் பெற்றதைவிட 2 இடங்கள் குறைவு. இடதுசாரிக் கட்சியான புதிய ஜனநாயக கட்சி 25 இடங்களைப் பெற்றது. பிளாக் குபெகோயிஸ் (Bloc Québécois) 34 இடங்களைப் பெற்றனர். இரண்டு இடங்களை மற்றவர்கள் கைப்பற்றினர். 2015 முதல் கடந்த 6 ஆண்டுகளில் 3-வது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்கும் ட்ரூடோ, " தொற்று நோய் கால பணிகளினால் எங்களைத் தேர்ந்தெடுத்து கனடாவை ஆள அனுப்பிவைக்கிறீர்கள், நீங்கள் விரும்பிய ஆட்சி மீண்டும் உங்களை வந்தடையும். தொற்று நோய் அல்லது தேர்தலைப் பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம்" என கூறிய ட்ரூடோ கனடா வழக்கப்படி பிரதமர்கள் புகைப்படம் எடுக்கும் இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

லிபரல் கட்சியில் இருந்து வெற்றி பெற்ற மற்ற இந்திய வம்சாவளிகள், பிராம்ப்டன் மேற்கிலிருந்து கமல் கெரா (55%), பிராம்ப்டன் வடக்கிலிருந்து ரூபி சஹோட்டா (54%), பிராம்ப்டன் தெற்கிலிருந்து சோனியா சித்து (50%), பிராம்ப்டன் கிழக்கிலிருந்து மணீந்தர் சித்து (55%), சுக் தாலிவால் சர்ரே-நியூட்டனில் இருந்து (54%).ஜார்ஜ் சாஹல் (42%), ஆரிஃப் விரானி (42%), ரன்தீப் சாராய் (44%), அஞ்சு தில்லான் (52%), சந்திர ஆர்யா (44%) மற்றும் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட வேட்பாளர் இக்விந்தர் கஹீர் (53%).

கனடா: ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாகப் பிரதமராகிறார்! ஆட்சியைத் தக்கவைத்தது லிபரல் கட்சி
அனிதா ஆனந்த்
அனிதா ஆனந்த்
Twitter/@AnitaOakville

பழமைவாத கட்சியிலிருந்து டிம் உப்பல் (38%) மற்றும் ஜஸ்ராஜ் சிங் ஹல்லன் (44%) ஆகியோர் தங்கள் பதவியை தக்கவைத்துள்ளனர். அதிக இந்தியர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் முக்கியமானது கனடா. இங்கு ஏறத்தாழ 16 லட்சம் இந்திய வம்சாவளிகள் உள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா, ஓண்டாரியோ, ஆல்பெர்ட்டா, பிராம்ப்டன், டொரான்டோ, வான்கூவர் பகுதிகளில் இந்தியர்கள் அதிகம். இதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் 22 தமிழ் உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய வம்சாவளியாகக் கட்சியை வழிநடத்தி தேர்தல் வெற்றியும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜக்மீத் சிங்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 2019 தேர்தலில் ட்ரூடோவுக்கு தனிப்பெரும்பான்மை அமைக்க 13 இடங்கள் தேவை ஏற்பட்ட போது ட்ரூடோ 24 இடங்கள் வெற்றி பெற்றிருந்த ஜக்மீத் சிங் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இம்முறையும் அதே போல ஜக்மீத் சிங் கிங் மேக்கர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு