Published:Updated:

`கடற்படைச் சீருடை;திடீர் துப்பாக்கிச் சூடு!'- அமெரிக்க துறைமுகத்தில் சிக்கிய இந்திய விமானப்படை தளபதி

பியர்ல் துறைமுகம்
பியர்ல் துறைமுகம் ( Facebook/@JBPHH )

ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பரில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ளது பிரபலமான பியர்ல் ஹார்பர் (US Joint Base Pearl Harbor) கப்பல் கட்டுமானத்தளம். இந்தத் தளத்தின் தெற்குவாயில் வழியாக நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இறுதியில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.

பியர்ல் துறைமுகம்
பியர்ல் துறைமுகம்
Facebook/@JBPHH

`பியர்ல் ஹார்பரில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் உண்மைதான்' எனத் துறைமுகச் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணி) நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Vikatan

துப்பாக்கிச்சூடு நடத்திய அடையாளம் தெரியாத அந்த நபர் அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் அணியும் சீருடையை அணிந்து வந்துள்ளார். அதனால் பாதுகாப்புகளை மீறி அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்தபோது இந்திய விமானப்படை தளபதி பதாரியா மற்றும் அவரது குழுவினர் அங்கு இருந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பதாரியா
பதாரியா
wikipedia

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பரில் நடக்கும் பசிபிக் விமானப்படை தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இந்திய விமானப்படை தளபதி பதாரியா, தன் குழுவினருடன் அங்கு சென்றுள்ளார். அப்போதுதான் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில், இந்திய விமானப்படையினருக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1941-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி இதே பியர்ல் ஹார்பருக்குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. இதனால், அமெரிக்கா - ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பகை மூண்டது.

பியர்ல் துறைமுகம்
பியர்ல் துறைமுகம்
Facebook/@JBPHH

1941-ம் ஆண்டு நடந்த பியர்ல் ஹார்பர் கோரச் சம்பவத்தின் நினைவு நாள் இன்னும் இரு தினங்களில் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் இன்று அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் தொடர்பாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பின்னணி தொடர்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புக்காக ஹார்பரின் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு