Published:Updated:

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு... 20 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு ( ட்விட்டர் )

ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே இன்று காலை 11 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. மக்கள் சிலர் விசா பெறுவதற்காக தூதரகத்திற்கு வெளியே காத்திருந்தனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் 2 ரஷ்ய அதிகாரிகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர் என ரஷ்ய அரசு தொடர்புடைய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு
ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு
ட்விட்டர்

ரஷ்ய தூதரகத்தில் தாக்குதல் நடத்த வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதியை அங்கிருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்க செய்திருக்க கூடும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் வடமேற்கு பகுதியில் மசூதியில் நடந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக இது மாதிரியான கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.