Published:Updated:

கனடா: திடீர் துப்பாக்கிச்சூடு... 21 வயது இந்திய மாணவர் பலியான சோகம்

கனடாவில் 21 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை

கனடாவில் கல்லூரியில் பயின்று வரும் 21 வயது இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கனடாவின் டொரோண்டோ நகரின் சுரங்கப்பாதை அருகே கடந்த வியாழன் அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், எதிர்பாராத விதமாக இந்திய மாணவர் உயிரிழந்ததாக கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கனடா போலீஸார், ``கார்த்திக் வாசுதேவ் எனும் 21 வயதுடைய இந்திய மாணவர், கடந்த வியாழன் அன்று டொரோண்டோ நகர் சுரங்கப்பாதை வழியே வேலைக்குச் சென்றபோது, அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், சுரங்கப்பாதை வாயிலிலேயே எதிர்பாராத விதமாகச் சுடப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்குப் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கார்த்திக் வாசுதேவ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்” எனத் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்த சோக சம்பவம் குறித்து அறிந்த இந்திய துணைத் தூதரகம், ``டொரோன்டோவில் நடந்த துப்பாக்கிக்சூட்டில் இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ் உயிரிழந்த செய்தி கேட்டு நாங்கள் வேதனையடைந்தோம். கார்த்திக் வாசுதேவ் குடும்பத்தினரிடம் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்" என ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில், ``இந்த சோக நிகழ்வால் மிகவும் வருத்தமடைந்தேன். கார்த்திக் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் சந்தேப்பட்டியலில் இருப்பதாக கனடா போலீஸார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism