Published:Updated:

பாகிஸ்தான்: மசூதியில் குண்டு வெடிப்பு; 20-க்கும் மேற்பட்டோர் பலி... பலர் படுகாயம் - தொடரும் பதற்றம்!

குண்டு வெடிப்பு
News
குண்டு வெடிப்பு ( ட்விட்டர் )

பாகிஸ்தானின் பெஷாவரிலுள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானிலுள்ள மசூதியில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின், பெஷாவர் நகரிலுள்ள மசூதியில் இன்று வழக்கம்போல தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்ததாகத் தெரிகிறது. அப்போது, அங்கு மதியம் 1:40 மணியளவில் திடீரென வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டிருக்கிறது. மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர், தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மசூதி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

குண்டு வெடிப்பு
குண்டு வெடிப்பு
ட்விட்டர்

இந்த வெடிகுண்டு விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருக்கிறது.