Published:Updated:

உக்ரைன்: திரையரங்கு மீது ரஷ்யாவின் தாக்குதல்... 300 பேர் பலி? - தொடரும் போரின் கோரத்தாண்டவம்

உக்ரைன்

``புதினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன்: திரையரங்கு மீது ரஷ்யாவின் தாக்குதல்... 300 பேர் பலி? - தொடரும் போரின் கோரத்தாண்டவம்

``புதினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Published:Updated:
உக்ரைன்

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 30-வது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமான தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது ரஷ்யா.

இதுவரை நிலையான முடிவுகள் ஏதும் எட்டப்படாமல் நான்கு வாரங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளும் நான்கு முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும், இரு தரப்பிலிருந்து ஆக்கபூர்வ முடிவுகள் எடுக்கப்படவில்லை.

மேலும், உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்குச் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், ரஷ்யா அதைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சென்ற வார இறுதியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``புதினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்.

உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் தாக்குதல்

மரியுபோல் நகரில் 1,00,000 மக்கள் உணவு, தண்ணீர், மருந்து இல்லாமல் மனிதாபிமானமற்ற நிலையில் வாழ்ந்துவருகின்றனர். போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுக்கள் கடினமானதாகவும், சில சமயங்களில் மோதலாகவும் இருக்கிறது. ஆனாலும் அதற்கான முயற்சியில் படிப்படியாக நாங்கள் முன்னேறிவருகிறோம்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், உக்ரைனில் உள்ள மரியுபோலில், ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மரியுபோலில் உள்ள ஒரு திரையரங்கில் பாதுகாப்புக்காக 300-க்கும் மேற்பட்ட உக்ரைனிய குடிமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ரஷ்யா அந்த திரையரங்கைத் தாக்கியதில் அங்கு இருந்த குடிமக்களில் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது எனப் பிரபல தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மரியுபோல் நகரில் தொடர்வதால் அங்கு மிகப் பதற்றமான சூழல் நிலவுகிறது. மரியுபோல் தற்போது உக்ரைனின் மற்ற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது எனத் தகவலும் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism