Published:Updated:

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்... 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையா?!

ஈரான்
News
ஈரான்

ஈரான் போராட்டத்தில் 300 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 40 பேர் சிறுவர்கள் எனவும் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியிருக்கிறது.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கைதுசெய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், போலீஸ் காவலிலேயே உயிரிழந்தது நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது. அதனால் அந்த நாட்டுப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் மிகப்பெரிய உள்நாட்டு எழுச்சியாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 400 போராட்டக்காரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில், 160 பேருக்கு 5 முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 80 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையும், 160 பேருக்கு 10 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்... 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையா?!
Vahid Salemi

இந்த நிலையில், ஈரான் போராட்டத்தில் 300 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 40 பேர் சிறுவர்கள் எனவும் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது. மேலும், இந்தப் போரட்டத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து இணைய சேவையில் ஈரான் தடங்கல் ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் தெருக்களில் இறங்கி, ஹிஜாப்களை கழற்றி, முடியைத் துண்டித்துக் கொண்டு தொடங்கிய போராட்டங்கள், மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரமாக மாறியது. பெண்கள் தலைமையில் தொடங்கிய இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. போராட்டத்தின் அடையாளமாகப் பெண்கள் இஸ்லாமிய மதகுருக்களின் தலையிலிருந்த தலைப்பாகையைத் தூக்கி எறிந்த வீடியோக்களும் வேகமாக பரவியது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரானின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.