Published:Updated:

`20 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்; இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!’ -சீனாவை கடுமையாகச் சாடிய அமெரிக்கா

ராபர்ட ஓ பிரையன்
ராபர்ட ஓ பிரையன்

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சீனாவிலிருந்து 5 வைரஸ்கள் பரவியுள்ளதாகவும் இதை நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகிலேயே கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 83,425 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த இரண்டு பெரும்பாதிப்புகளிலிருந்து மீளமுடியாமல் அமெரிக்க மக்களும் அந்நாட்டு அரசும் திணறி வருகிறது.

அமெரிக்கா
அமெரிக்கா
AP

மொத்த உலகத்தின் இந்த மோசமான நிலைக்கும் சீனாதான் காரணம் என அந்நாட்டைத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது அமெரிக்கா. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் 5 வைரஸ்கள் சீனாவிலிருந்து பரவியதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனாவால் உலகம் முழுவதும் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 2,50,000 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு சீனாதான் காரணம்.

`தனிமையில் 3 நிர்வாகிகள்; டாஸ்க் ஃபோர்ஸையும் விடாத கொரோனா’ -வெள்ளை மாளிகையை இறுக்கும் வைரஸ் தொற்று

உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களும் எழுச்சி பெற்றுவிட்டனர். சீனாவிலிருந்து வரும் கொள்ளை நோய்களை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது. வைரஸ் சீனாவின் ஆய்வுக் கூடத்திலிருந்து பரவியிருந்தாலும், இறைச்சி சந்தையிலிருந்து பரவியிருந்தாலும் சரி.. இது நல்லதுக்கு இல்லை.

சீனாவின் வுகான் நகரிலிருந்துதான் கொரோனா பரவியது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து மட்டும் சார்ஸ், ஏவியன் ஃபுளூ, ஸ்வைன் ஃபுளூ, தற்போது கோவிட் -19 ஆகிய வைரஸ்கள் பரவியுள்ளன. (5-வது வைரஸ் பெயரை அவர் குறிப்பிடவில்லை)

ராபர்ட் - ட்ரம்ப்
ராபர்ட் - ட்ரம்ப்
AP

சீன மக்கள் குடியரசு கட்டவிழ்த்துள்ள இந்தப் பயங்கர பொது சுகாதாரத்தை உலகம் இன்னும் எவ்வளவு நாளைக்குத் தாங்கும்? சீனா ஒரு கட்டத்தில் இதை நிச்சயம் நிறுத்தியே ஆகவேண்டும் என்றுதான் கூறுகிறேன். சீனாவில் கொரோனாவால் கடுமையான நிலை ஏற்பட்டபோது அந்நாட்டு மக்களுக்கு உதவ எங்கள் மருத்துவ வல்லுநர்களைச் சீனாவுக்கு அனுப்ப உத்தேசித்தோம்.

ஆனால் அந்நாட்டு அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது. வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்பதைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால் இந்த உண்மை எப்போது வெளிவரும் என்ற கால அளவை எங்களால் வழங்க முடியாது.

`ஜீன் தோற்றம் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்; ஆய்வகத்தை மூடிய சீனா’ - வெள்ளை மாளிகை பகிரங்க குற்றச்சாட்டு

தங்கள் பொதுச் சுகாதாரத்தை எப்படி சிறப்பாகக் கையாள வேண்டும் என்பதை சீனா கண்டுபிடித்து வரையறுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கிருந்து வரும் மற்றொரு வைரஸுக்கு நிச்சயம் உலகம் தாங்காது. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல மொத்த உலகத்துக்கும் நடக்கும் மிக பெரிய பயங்கரம் இது. சீனாவால் உலகத்தின் பொருளாதாரம் 5-வது முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ராபர்ட் ஓ பிரையன்
ராபர்ட் ஓ பிரையன்
wikipedia

சீனாவின் இந்தச் செயலை நிச்சயம் நிறுத்தியே ஆகவேண்டும். சீனாவுக்கு உலகநாடுகளின் உதவி தேவைப்படுகிறது. இதேபோல் மீண்டும் நடக்காமல் இருக்க நாங்கள் சீனாவின் பொது சுகாதாரத்துக்கு உதவத் தயாராக உள்ளோம். இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கடுமையாகப் பேசியுள்ளார். இவரின் பேச்சு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு