Published:Updated:

`ஊரடங்கு தளர்வு; பள்ளிகள் திறப்பு!’- கொரோனா பரவல் அதிகரிப்பால் உத்தரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ்

நோய்ப் பரவல்
நோய்ப் பரவல்

குறைந்த அளவில் திறக்கப்பட்ட பள்ளியில், 1,50,000 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனாவின் தாக்கத்தால், பெரும்பாலான நாடுகள் லாக்டௌன் அறிவித்துள்ளன. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் லாக்டௌனைப் படிப்படியாகத் தளர்த்தும் விதமாக கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டன. குறைந்த அளவில் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு, 1,50,000 மாணவர்கள்வந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் கல்வி நிறுவனம்
பிரான்ஸ் கல்வி நிறுவனம்
Jean-Michel Blanquer twitter

குறிப்பாக, வழக்கமான பாதிப்புகளிலிருந்து புதியதாக 70 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அந்த வகையில், இதுவரை பிரான்ஸில் 1,42,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நோய்த் தொற்றுக்கு 28,108 பேர் உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் வெளியாகியிருக்கின்றன. இவ்வாறு நோய்த் தொற்று அதிகரித்திருப்பதற்குப் பள்ளிகள் திறக்கப்பட்டதே காரணம் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸின் கல்வித்துறை அமைச்சர் ஜீன் மைக்கேல் பிளாங்கர் கூறுகையில், ``கடந்த வாரம் ஆரம்பக் கல்வி பயில்கிற 30 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு நோய்த் தொற்று பற்றி தெரியாது என்பதே, இந்தப் பரவல் அதிகரிக்கக் காரணம். எனவே, குழந்தைகளைப் பெற்றோர்களே பாதுகாக்கும்படி கூறியுள்ளோம். சூழலைப் பொறுத்து உயர்நிலைக் கல்வி நிறுவனங்கள் விரைவில் திறக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை அமைச்சர் ஜீன் மைக்கேல் பிளாங்கர்
கல்வித்துறை அமைச்சர் ஜீன் மைக்கேல் பிளாங்கர்

மேலும் எத்தனை மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து எதுவும் கூறவில்லை. இதையடுத்து அவசரகால நடவடிக்கையாக, திறக்கப்பட்ட பள்ளிகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரான்ஸில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே பாடம் கற்பிக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு