Published:Updated:

இந்தியாவில் பயிற்சி பெற 4 இலங்கை வீரர்கள் வருகை!

Vikatan Correspondent
இந்தியாவில் பயிற்சி பெற 4 இலங்கை வீரர்கள் வருகை!
இந்தியாவில் பயிற்சி பெற 4 இலங்கை வீரர்கள் வருகை!
இந்தியாவில் பயிற்சி பெற 4 இலங்கை வீரர்கள் வருகை!

சென்னை: இந்தியாவில் பயிற்சி பெறுவதற்காக இலங்கையைச் சேர்ந்த விமானப் படை  அதிகாரிகள் 4 பேர் புதிதாக வந்துள்ளனர்.

இலங்கை விமானப் படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க தமிழகத்தில் கடும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையம் மற்றும் குன்னூர் வெலிங்டன்  ராணுவ முகாம் ஆகிய இடங்களில் பயிற்சி பெற வந்த இலங்கை வீரர்களுக்கு கடும்  எதிர்ப்பு கிளம்பியது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சிகள், அரசியல் இயக்கங்கள் என அனைவரும்  மத்திய அரசின் செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனாலும் மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும்விதமாக
இலங்கையைச் சேர்ந்த விமானப் படை அதிகாரிகள் 4 பேர் இந்தியாவில் பயிற்சி பெற  தற்போது இந்தியா வந்துள்ளனர்.

'இஞ்சின் ஃபில்டர் கோர்ஸ்’ தொடர்பாக மேற்கு வங்கத்துக்கு அவர்கள் இன்று  புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் வரும் நவம்பர் 23ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து  பயிற்சி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.