Published:Updated:

``ஹிட்லரால் முடியாததை புதின் செய்துவிட்டார்" - ரஷ்யத் தாக்குதலில் பலியானவர் குறித்து உக்ரைன்

ஹிட்லர், போரிஸ் ரோமன்சென்கோ, புதின்

இரண்டாம் உலகப் போரின்போது தப்பிப் பிழைத்த 96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ, உக்ரைனில் கடந்த வாரம் ரஷ்யப் படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.

``ஹிட்லரால் முடியாததை புதின் செய்துவிட்டார்" - ரஷ்யத் தாக்குதலில் பலியானவர் குறித்து உக்ரைன்

இரண்டாம் உலகப் போரின்போது தப்பிப் பிழைத்த 96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ, உக்ரைனில் கடந்த வாரம் ரஷ்யப் படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.

Published:Updated:
ஹிட்லர், போரிஸ் ரோமன்சென்கோ, புதின்

உக்ரைனில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி முதல் ரஷ்யப் படையினருக்கும், உக்ரேனியப் படையினருக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது. இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் போன்ற நகரங்களை ஆக்கிரமிக்கும் முனைப்புடன் ரஷ்யப் படையினர் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் கார்கிவ் நகர அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்யப் படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில், இரண்டாம் உலகப் போரின்போது தப்பிப் பிழைத்த 96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ உயிரிழந்ததாக புச்சென்வால்ட் நினைவகம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

ரஷ்யப் படையினரின்  வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ரோமன்சென்கோ (96)
ரஷ்யப் படையினரின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ரோமன்சென்கோ (96)

1926-ல் பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரின்போது 1942-ல் டார்ட்மண்டுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கு கட்டாய சுரங்கத் தொழில் செய்துவந்தார். பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, வேறொரு முகாமுக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பால்டிக் கடல் தீவான யூஸ்டோமில் உள்ள பீனெமுண்டேவுக்கு மாற்றப்பட்டு, அங்கு V2 ராக்கெட் திட்டம், டோரா-மிட்டல்பாவ் வதை முகாம் மற்றும் பெர்கன்-பெல்சன் வதை முகாம் ஆகியவற்றில் கட்டாயத் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் உயிர் பிழைத்த பலரில் ஒருவரான போரிஸ் ரோமன்சென்கோ, கடந்த வாரம் உக்ரைனில் ரஷ்யப் படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதின்
புதின்

இவரின் மரணம் தொடர்பாக வெளியான அறிக்கையில், ``ரோமன்சென்கோ, புச்சென்வால்ட்-டோரா சர்வதேசக்குழுவின் துணைத் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார், நாஜி குற்றங்களை ஆவணப்படுத்தத் தன்னை அர்ப்பணித்தார். ஒரு நெருங்கிய நண்பரை இழந்ததற்காக நாங்கள் துக்கப்படுகிறோம்" என புச்சென்வால்ட் நினைவகம் கூறியிருந்தது.

ரோமன்சென்கோவின் மரணத்துக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றன. மேலும், ரோமன்சென்கோவின் மரணத்துக்கு, ``ஹிட்லரால்கூட சாதிக்க முடியாததை புதினால் சாதிக்க முடிந்தது" என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism