Published:Updated:

சிறைச்சாலைமீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்: 600 கைதிகள் தப்பியோட்டம் - நைஜீரியாவில் பரபரப்பு!

நைஜீரியா சிறை ( ட்விட்டர் )

நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைமீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறைச்சாலைமீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்: 600 கைதிகள் தப்பியோட்டம் - நைஜீரியாவில் பரபரப்பு!

நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைமீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நைஜீரியா சிறை ( ட்விட்டர் )

நைஜீரியா தலைநகர், அபுஜாவில் குஜே என்ற சிறைச்சாலை இருக்கிறது. இந்த சிறைச்சாலைமீது பயங்கரவாதிகள் நேற்றிரவு திடீரென தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் சிறைச்சாலை சுவர் இடிந்துவிழுந்து 600 கைதிகள் வரை தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய நைஜீரிய அதிகாரி ஒருவர், ``அபுஜாவில் உயா் பாதுகாப்பு கொண்ட குஜே சிறைச்சாலைமீது பயங்கரவாதிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தினார்கள். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறையின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து குறைந்தது 600-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர்.

நைஜீரியா சிறை
நைஜீரியா சிறை
ட்விட்டர்

பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதன் காரணமாக, போலீஸ் ஒருவர் உயிரிழந்தாா். இந்தத் தாக்குதல் சம்பவத்தைப் பயன்படுத்தி, சிறையிலிருந்து குறைந்தது 600 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவா்களில் சுமாா் 300 கைதிகள் மறுபடியும் சிக்கிவிட்டனர். மீதமுள்ள கைதிகளை போலீஸாா் தேடி வருகின்றனர்" என்றார்.

சிறைச்சாலைமீது தாக்குதல் நடத்தியவர்கள் போகோஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. சிறையில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!