தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில், இரவு நேர விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு பள்ளிச் சிறுவர்கள் சிலர் கும்பலாக வந்திருக்கின்றனர். பள்ளித் தேர்வு முடிந்ததைக் கொண்டாடும்விதமாக அவர்கள் இரவு விடுதிக்கு வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், விடுதிக்கு வந்த சிறுவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இறந்து கிடந்தவர்களில் 13 வயதுக்குட்பட்டவர்களும் அடங்குவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த மரணங்களின் காரணம் தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.
உள்ளூர் செய்திகளின்படி, இறந்த சிறுவர்களின் உடல்களைப் பார்க்க உறவினர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை எனப்படுகிறது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
