Published:Updated:

உலக நாடுகளின் பாராமுகம்: பஞ்சம், பட்டினியால் சிறுநீரகத்தை விற்று உணவு உண்ணும் ஆப்கானிஸ்தான் மக்கள்!

ஆப்கானிஸ்தான் ( மாதிரிப் படம் )

ஐ.நா-வின் உலக உணவு திட்டத் தலைவர் டேவிட் பஸ்லி, ஆப்கானிஸ்தான் மக்கள் பலரும் வறுமை காரணமாக தங்களின் உடல் பாகங்களையும், குழந்தைகளையும் விற்றுக்கொண்டிருப்பதாகவும், எனவே உலக நாடுகள் உடனடியாக ஆப்கன் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

உலக நாடுகளின் பாராமுகம்: பஞ்சம், பட்டினியால் சிறுநீரகத்தை விற்று உணவு உண்ணும் ஆப்கானிஸ்தான் மக்கள்!

ஐ.நா-வின் உலக உணவு திட்டத் தலைவர் டேவிட் பஸ்லி, ஆப்கானிஸ்தான் மக்கள் பலரும் வறுமை காரணமாக தங்களின் உடல் பாகங்களையும், குழந்தைகளையும் விற்றுக்கொண்டிருப்பதாகவும், எனவே உலக நாடுகள் உடனடியாக ஆப்கன் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Published:Updated:
ஆப்கானிஸ்தான் ( மாதிரிப் படம் )

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதிலிருந்து, உலக நாடுகள் அந்நாட்டுக்கு வழங்கிவந்த அனைத்து உதவிகளையும் நிறுத்திக்கொண்டன. இதனால், ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, உணவுத்தட்டுப்பாட்டால் மக்கள் வேலைவாய்ப்பிழந்து, வருமானமின்றி வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துவருகின்றனர். கொடுமையின் உச்சகட்டமாக, தற்போது ஆப்கன் மக்கள் தங்களின் உடல் உறுப்புகளையும், பெற்ற குழந்தைகளையும் விற்று, உணவு உண்ணும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் தரையிறங்கிய ஆப்கானிஸ்தான் மக்கள்
அமெரிக்காவில் தரையிறங்கிய ஆப்கானிஸ்தான் மக்கள்

உலக நாடுகளின் நிதி உதவிகள் நிறுத்தம்:

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில், தாலிபன்கள் ஆப்கனிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டுவந்த சர்வதேச நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வெளிநாட்டு முதலீடுகள், வர்த்த உறவுகள், போக்குவரத்து என அனைத்து நடவடிக்கைகளும் துண்டிக்கப்பட்டன. தலைநகர் காபூலிலிருந்த அனைத்துப் பெரிய நிறுவனங்களும் நாட்டைவிட்டு வெளியேறின. அமெரிக்கா 9,400 கோடி டாலர் ரிசர்வ்வை வங்கியிலிருந்து நிறுத்திவைத்துவிட்டது. உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்டவையும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டன. இதனால் ஆப்கன் பொருளாதாரம் வரலாறு காணத அளவுக்கு வீழ்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பஞ்சத்தால் ஏற்பட்ட பரிதாப நிலை:

இதனால், ஆப்கானிஸ்தானில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு பசி, பஞ்சம் தலைவிரித்தாடியது. சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றித் தவித்தனர். பசிக்கொடுமையால் ஆப்கன் மக்கள் தங்கள் வீடுகளிலுள்ள பொருள்களை விற்கத் தொடங்கினர்.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள்
ஆப்கானிஸ்தான் குழந்தைகள்

காபூலின் சம்மன் இ ஹசோரி பார்க் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திவந்த, ஃபிரிட்ஜ், டி.வி,, கட்டில், தரைவிரிப்புகள் என விலையுயர்ந்த ஆடம்பரப் பொருள்களையெல்லாம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தனர். அதன் மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தில் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பசியாற்றிவந்தனர். பின்னர், வீட்டுப்பொருல்களும் தீர்ந்துபோக, தங்கள் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளையே விற்கும் நிலைக்குச் சென்றனர்.

தாலிபன் கொடி
தாலிபன் கொடி

ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை:

ஆப்கானிஸ்தானில் வாழும் 95 சதவிகித மக்களுக்குப் போதுமான உணவு இல்லை என ஐ.நா அறிக்கை வெளியிட்டது. சுமார் 2.3 கோடி மக்கள் பட்டினியில் சிக்கித் தவித்துவருவதாக பொருளாதார வல்லுநரான அப்துல் நசீர் ரிஷ்டியா உள்ளிட்டோர் கவலை தெரிவித்தனர்.

மேலும், குழந்தைகளின் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக ஐ.நா-வின் குழந்தைகள் பாதுகாப்புக்கான யூனிசெஃப் (UNICEF) அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில், 50 லட்சம் ஆப்கன் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சாவின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டது.

வீட்டுப் பொருள்கள், குழந்தைகள்... இப்போது உடல் உறுப்புகள்:

​ஆப்கன் மக்கள் உணவுக்காக, உடைமைகளையும் பெற்ற குழந்தைகளையும் விற்கும் கொடூரநிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில், வறுமையைத் தாக்குப்பிடிக்க, ஆப்கானிஸ்தானின் 5 வயது சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் சிறுநீரகத்தை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உணவு உண்டுவருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், இது சம்பந்தமான புகைப்படங்கள், காணொலிகள் இணையத்தில் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். மேலும், ஒரு சிறுநீரகத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.70,000 வரை கிடைப்பதாகவும், அந்தப் பணத்தைவைத்து தற்காலிகமாகத் தங்களை சாவின் பிடியிலிருந்து தற்காத்துக்கொள்வதாகவும் அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பசிக் கொடுமையில் கிட்னியை விற்கும் ஆப்கன் மக்கள்
பசிக் கொடுமையில் கிட்னியை விற்கும் ஆப்கன் மக்கள்

உலக நாடுகளுக்கு டேவிட் பஸ்லி வேண்டுகோள்:

இந்த நிலையில் ஐ.நா-வின் உலக உணவு திட்டத் தலைவர் டேவிட் பஸ்லி (David beasley), ஆப்கானிஸ்தான் மக்கள் பலரும் வறுமை காரணமாக தங்களின் உடல் பாகங்களையும், குழந்தைகளையும் விற்றுக்கொண்டிருப்பதாகவும், எனவே உலக நாடுகள் உடனடியாக ஆப்கன் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது குறித்து விரிவாகப் பேசிய டேவிட் பஸ்லி, ``ஆப்கனில் தற்போது 4 கோடி மக்களில் 2.3 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர். இதனால், ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் ஒருவேளைச் சோற்றுக்காகத் தங்களின் சிறுநீரகங்களை விற்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் 5 வயது, 10 வயது பெண் குழந்தைகளையும் விற்றுவருகின்றார்கள். இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 97 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் செல்லக்கூடிய அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

டேவிட் பஸ்லி (David beasley),  ஐ.நா-வின் உலக உணவு திட்டத் தலைவர்
டேவிட் பஸ்லி (David beasley), ஐ.நா-வின் உலக உணவு திட்டத் தலைவர்
wikipedia

மேலும், உலக நாடுகள் இனியும் தாமதிக்காமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிசெய்ய முன்வர வேண்டும் என ஐ.நா சார்பில் மீண்டும் ஒருமுறை உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்!" என அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

இந்த நிலையில், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்திய அரசாங்கம், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 50,000 டன் கோதுமை, அத்தியாவசிய மருந்துப் பொருள்களை வழங்க முடிவுசெய்திருக்கிறது. மேலும், பல்வேறு நாடுகள் உதவ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.