Published:Updated:

காபூல் குண்டு வெடிப்புகள்... ஆப்கனில் உள்நாட்டு போர் மேகம் சூழ்கிறதா?

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

ஈராக் போரின்போது அல் கொய்தா வலுவிழந்து, அதிலிருந்து வெளியேறியவர்கள் புதிய அமைப்புகளை உருவாக்கினார்கள். 2007-ல் அமெரிக்கப் படைகள் இராக்கில் வலுவாகக் காலுன்றின.

காபூல் குண்டு வெடிப்புகள்... ஆப்கனில் உள்நாட்டு போர் மேகம் சூழ்கிறதா?

ஈராக் போரின்போது அல் கொய்தா வலுவிழந்து, அதிலிருந்து வெளியேறியவர்கள் புதிய அமைப்புகளை உருவாக்கினார்கள். 2007-ல் அமெரிக்கப் படைகள் இராக்கில் வலுவாகக் காலுன்றின.

Published:Updated:
ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியது முதலே அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அதன் உச்சமாக ஆகஸ்ட் 26 அன்று மாலை காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அடுத்த ஒரு மணி நேரத்தில் காபூலில் ஒரு ஹோட்டலிலும் குண்டு வெடித்தது. குண்டு வெடிப்புகளில் 108 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க வீரர்கள், மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்த 13 பேரும் பலியானவர்களில் அடக்கம். காபூலில் தொடரும் இந்தப் பதற்றம் சர்வதேச நாடுகளைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவும் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளன.

ஆகஸ்ட் 29 அன்று காபூல் விமான நிலையத்துக்கு அருகில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பைச் சேர்ந்த ஒரு வாகனத்தை அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் தாக்கி அழித்திருக்கிறது. அந்த வாகனத்தில் ஏற்பட்ட பெரும் வெடிப்பால், அதில் ஏராளமான வெடிபொருள்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பு காபூல் விமான நிலையத்தின் மீது நடத்தவிருந்த தற்கொலைப்படை தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட பொதுமக்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 30 அன்று காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஐந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், அவை ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தப் பதற்றமான சூழலிலும் மக்களை வெளியேற்றும் பணி தொடரும் என்று அறிவித்துள்ளது அமெரிக்கா.

காபூல் குண்டு வெடிப்புகள்... ஆப்கனில் உள்நாட்டு போர் மேகம் சூழ்கிறதா?

ஐ.எஸ்.ஐ.எஸ்-கே... யார் இவர்கள்?

ஈராக் போரின்போது அல் கொய்தா வலுவிழந்து, அதிலிருந்து வெளியேறியவர்கள் புதிய அமைப்புகளை உருவாக்கினார்கள். 2007-ல் அமெரிக்கப் படைகள் இராக்கில் வலுவாகக் காலுன்றின. 2013-ல் இராக்கின் அல் கொய்தா அமைப்பு தனது பெயரை `ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்று அறிவித்தது. மெல்ல மெல்ல இந்த அமைப்பு சிரியாவின் அலெப்போ முதல் இராக்கின் தியாலா வரை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அமெரிக்கப் படைகள் இந்த அமைப்பின்மீது 8,000-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தின. 2015-ல் ஐ.எஸ்.ஐ.எஸ் தனது வலைப்பின்னலை எட்டு நாடுகளுக்கு விரிவுபடுத்தியது. 2015-ல் ரஷ்யாவிலும், பாரிஸ் நகரிலும் தாக்குதல்களை நடத்திய இந்த அமைப்பு, சவுதி அரேபியா உட்பட உலகின் பல நாடுகளில் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

காபூல் குண்டு வெடிப்புகள்... ஆப்கனில் உள்நாட்டு போர் மேகம் சூழ்கிறதா?

2015-ல், ஆப்கானிஸ்தானின் கோர்சான் மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் ஒரு பிரிவு செயல்படத் தொடங்கியது. இந்த அமைப்பைச் சர்வதேச ஊடகங்கள் ISIS-K, ISIL-K, IS-K என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றன. இன்றைய தேதியில் ஆப்கானிஸ்தானின் மிகத் தீவிரமான ஆயுதம் ஏந்தியக் குழுவாக ஐ.எஸ்.ஐ.எஸ்-கே கருதப்படுகிறது. தாலிபன் அமைப்பில் இருந்தவர்கள் தங்களது அமைப்பு கொள்கைரீதியாக நீர்த்துவிட்டது என்று கருதி, அதிலிருந்து வெளியேறி ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ்-கே இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் மசூதிகள், புனிதத்தலங்கள், பொது இடங்கள், மருத்துவமனைகள் எனப் பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

இன்றைய தேதியில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பில் 3,000-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். அந்த அமைப்பு தொடர்ச்சியாக ஆப்கன் ராணுவப் படைகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், ஆப்கானிஸ்தானிலுள்ள ஷியா மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினரை தாக்கியும் அச்சுறுத்தியும் வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும்கூட இவர்களின் தாக்குதல்களிலிருந்து தப்பவில்லை.

காபூல் குண்டு வெடிப்புகள்... ஆப்கனில் உள்நாட்டு போர் மேகம் சூழ்கிறதா?

பிளவுபட்ட தாலிபன்கள்!

தாலிபன்கள் போர்க்களத்தைத் தவிர்த்துவிட்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றதை தாலிபன்களிலுள்ள அடிப்படை வாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோஹாவில் தாலிபன்கள் அலுவலகத்தைத் திறந்தது, அங்குள்ள சொகுசு விடுதிகளில் தாலிபன் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது ஆகியவையெல்லாம் அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர் தாலிபன்களை அதிகாரப் பசியுள்ளவர்கள், அதிகாரத்தைப் பிடிக்கத் துடிப்பவர்கள் என்றெல்லாம் விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும் உலகம் முழுவதுமுள்ள தீவிரவாத இயக்கங்கள் அவர்களுக்கு வாழ்த்து செய்திகளை அனுப்பினார்கள். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் எந்தவொரு பிரிவும் அவர்களை வாழ்த்தவில்லை. ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருக்கும் தாலிபன்கள் எப்படி இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பைச் சமாளிக்கப் போகிறார்கள் என்பது இன்று பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. சிரியா மற்றும் இராக்கிலுள்ள எண்ணெய்க் கிணறுகளிலிருந்து பெறப்படும் கச்சா எண்ணெயின் மூலம் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தினசரி 20-25 கோடி ரூபாய் கிடைக்கிறது. அவர்களின் சொத்து மதிப்பு பல பில்லியன் டாலர் என ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.

காபூல் குண்டு வெடிப்புகள்... ஆப்கனில் உள்நாட்டு போர் மேகம் சூழ்கிறதா?

இந்த முறை காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தப் போகிறார்கள் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளின் உளவுத்துறை அறிவித்தது. அவர்களின் நாடுகளைச் சேர்ந்தவர்களை காபூல் விமான நிலையம் நோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த அறிவிப்பை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆப்கானிஸ்தானின் வசதி படைத்த மக்கள் அனைவரும், கிடைக்கும் வழியில் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து விமான நிலையத்தில் எந்நேரமும் காத்திருக்கிறார்கள்.

காபூலில் நடைபெறும் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பின் முகாம்களை அழிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தொடர்ந்து மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவத் தளத்திலிருந்து ஆளில்லா விமானம் ஆப்கானிஸ்தானின் நன்கார்ஹர் மாகாணத்திலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பினர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. காபூல் விமான நிலையத் தாக்குதலை திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பின் முக்கியத் தலைவர் அதில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

காபூல் குண்டு வெடிப்புகள்... ஆப்கனில் உள்நாட்டு போர் மேகம் சூழ்கிறதா?
காபூல் குண்டு வெடிப்புகள்... ஆப்கனில் உள்நாட்டு போர் மேகம் சூழ்கிறதா?

இராக், சிரியா, ஏமன் போல ஆப்கானிஸ்தானும் உள்நாட்டுப் போர் என்னும் சூழலை நோக்கித் தள்ளப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தாலிபன்களைப் பொறுத்தவரை அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததை ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பு இன்று அவர்களுக்குச் செய்கிறது. இடையில் மாட்டிக்கொண்டிருப்பது சாமானிய மக்களே. போர் நடக்கும் நாடுகளிலெல்லாம் அவர்களே யாரோ சிலரின் அதிகாரப் பசிக்கான விலையைக் கொடுக்கிறார்கள். இப்போதும் காபூல் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த சாமானிய மக்கள், ஒரு மதிப்பான வாழ்க்கைக்குத்தானே பாடுபட்டார்கள்... அமைதியான வாழ்வுக்குத்தானே ஏங்கினார்கள்... போர் மனிதகுலத்தின் எதிரி என்பதையே ஒவ்வொரு தாக்குதலும் உயிரிழப்பும் பாடம் கற்பித்துச் செல்கின்றன.

காபூல் குண்டு வெடிப்புகள்... ஆப்கனில் உள்நாட்டு போர் மேகம் சூழ்கிறதா?

“இது காந்தியின் இந்தியா இல்லை!”

ஆப்கானிஸ்தானின் பர்யப் மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ரன்கீனா கர்கர் ஆகஸ்ட் 20-ம் தேதி டெல்லி வந்தார். ஆனால், இந்திய அரசு அவரை அனுமதிக்காமல் இஸ்தான்புல் நகரத்துக்கு நாடு கடத்தியது. ரன்கீனா கர்கர், ஆப்கானிஸ்தானில் அஷ்ரஃப் கானி அரசில் முக்கியப் பங்காற்றியவர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள், ஆப்கன் அகதிகளை அனுமதித்துவருகின்றன. அமெரிக்கா மட்டும் ஒரு லட்சம் பேரை அனுமதித்துள்ள சூழலில் இந்தியாவுக்கு வந்த ஒற்றை நபர் ஏன் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது பெரும் விவாதமாக எழுந்துள்ளது. மனம் நொந்த ரன்கீனா கர்கரோ, “இது காந்தியின் இந்தியா இல்லை” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.