Published:Updated:

`அதிபர் ட்ரம்ப் முதல் சீன மாணவர்கள் வரை..!' - பரவும் இந்தியாவின் 'நமஸ்தே' கலாசாரம்

நமஸ்தே சொல்லும் தலைவர்கள் ட்ரம்ப், வரத்கர்
நமஸ்தே சொல்லும் தலைவர்கள் ட்ரம்ப், வரத்கர்

'இந்திய முறையில் 'நமஸ்தே' சொல்வது எளிமையானது... ஜப்பான் முறையில் வாழ்த்திக்கொள்வதும் நல்லது!'

அயர்லாந்தின் பிரதமராக இருப்பவர், லியோ வரத்கர். இந்திய வம்சாவளியான இவர், மகாராஷ்டிர மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர். கடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, மகாராஷ்டிரத்தில் உள்ள தன் தந்தை பிறந்த கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். தற்போது, லியோ வரத்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நமஸ்தே சொலும் ட்ரம்ப்
நமஸ்தே சொலும் ட்ரம்ப்

வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பையும் சந்தித்தார். வழக்கமாக, தலைவர்கள் சந்தித்தால் பரஸ்பரம் கை குலுக்கிக்கொள்வார்கள். ஆனால், இந்த முறை கொரோனா வைரஸ் காரணமாக இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. இந்திய முறையில், இரு தலைவர்களும் பரஸ்பரம் நமஸ்தே சொல்லிக்கொண்டார்கள்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், 'இந்தியா சென்று வந்த பிறகு, தான் யாருடனும் கைகுலுக்குவதில்லை. அதற்கு பதிலாக இந்திய முறையில்தான் வணக்கம் செலுத்துகிறேன். இது எளிமையாகவும் இருக்கிறது. ஜப்பான் முறையில் வாழ்த்திக்கொள்வதும் நல்லது' என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் மட்டுமல்ல, உலகம் முழுக்க பல நாடுகளில் இப்போது மக்கள் நமஸ்தே சொல்ல பழகிக் கொண்டுள்ளார்கள்.

நமஸ்தே செய்யும் இளவரசர் சார்லஸ்
நமஸ்தே செய்யும் இளவரசர் சார்லஸ்

லண்டனில் நேற்று நடந்த விழா ஒன்றில் பங்கேற்க இளவரசர் சார்லஸ் வந்திருந்தார். காரை விட்டு இறங்கியவர், வழக்கம்போல வரவேற்றவரிடத்தில் கை குலுக்க எத்தனித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டவர், சடாரென்று கையை பின்னுக்கு இழுந்துக்கொண்டு, இந்திய ஸ்டைலில் நமஸ்தே சொன்னார். இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது. 'நமஸ்தே' உலக மக்களின் புதிய 'ஹலோ' வாக மாறியிருக்கிறது.

இந்திய முறையில் வணக்கம் சொல்லும் மாணவர்கள்
இந்திய முறையில் வணக்கம் சொல்லும் மாணவர்கள்

குறிப்பாக, கொரோனா உருவான சீனாவில், நமஸ்தே செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இந்தியாவில், இதுவரை 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .

#CoronaUpdates `ஒற்றை இலக்க சீனா.. கவலை அளிக்கும் இத்தாலி நிலவரம்..!' -கொரோனா ஸ்டேட்டஸ்

ஹரியானாவில் 14 வெளிநாட்டவருக்கு கொரானா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 57 இந்தியர்களுக்கும் 17 வெளிநாட்டவர்களும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு