Published:Updated:

எலிசபெத் இறப்பு: கொடிகள், ரூபாய் நோட்டுகள், காமென்வெல்த் என பிரிட்டன் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்!

எலிசபெத் ( JON HRUSA )

மகாராணியின் பெயர், உருவப்படம் என அச்சடிக்கப்பட்ட கொடிகள், பணத்தாள்கள், தேசிய கீதம், ஜெபம், ராயல் வாரண்டுகள் என அனைத்தையும் நீக்கி, புதிய மன்னனின் உருவத்தைப் பதிக்க அதிக நேரம் எடுக்கும்.

எலிசபெத் இறப்பு: கொடிகள், ரூபாய் நோட்டுகள், காமென்வெல்த் என பிரிட்டன் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்!

மகாராணியின் பெயர், உருவப்படம் என அச்சடிக்கப்பட்ட கொடிகள், பணத்தாள்கள், தேசிய கீதம், ஜெபம், ராயல் வாரண்டுகள் என அனைத்தையும் நீக்கி, புதிய மன்னனின் உருவத்தைப் பதிக்க அதிக நேரம் எடுக்கும்.

Published:Updated:
எலிசபெத் ( JON HRUSA )

பிரிட்டனை நீண்ட காலம் ஆண்ட மகாராணி எனப் புகழ்பெற்ற எலிசபெத், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய 96வது வயதில் காலமானார். பால்மோரல் அரண்மனையில் அவரின் உயிர் பிரிந்ததாக பங்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

இவருடைய இறப்பால் பிரிட்டன் ஸ்தம்பித்து இருந்தாலும், இதன் பிறகு பிரிட்டனில் ஏற்படவிருக்கக்கூடிய மாற்றங்கள் மிகவும் சவாலானவை. ராணியின் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டன் எதிர்கொள்ள இருக்கும் நெறிமுறைகள் பொருளாதார சீர்க்குலைவை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண மதிப்பிலும் சரிவை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னர் சார்லஸ் - ராணி எலிசபெத்
மன்னர் சார்லஸ் - ராணி எலிசபெத்
ட்விட்டர்

அதாவது ராணியின் மரணத்துக்குப் பின் குறைந்தது 12 நாள்களாவது இங்கிலாந்து ஸ்தம்பித்துப் போய் இருக்கும். ராணியின் மரணம் வேலை நேரத்தில் நிகழ்ந்திருந்தால், மரியாதையின் அடையாளமாக லண்டனின் பங்குச் சந்தை மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவற்றைத் தாண்டி மகாராணியின் பெயர், உருவப்படம் என அச்சடிக்கப்பட்ட கொடிகள், பணத்தாள்கள், தேசிய கீதம், ஜெபம், ராயல் வாரண்டுகள் என அனைத்தையும் நீக்கி, புதிய மன்னனின் உருவத்தைப் பதிக்க அதிக நேரம் எடுக்கும்.

கொடிகள்: காவல் நிலையங்களின் வெளியில் ஏற்றப்படும் கொடி, கடற்படை கப்பலில் ஜெனரல் பயணம் செய்யும்போது பயன்படுத்தும் தரம், ராணுவ படைப்பிரிவுகள் என EIIR பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கொடிகள் மாற்றப்படும்.

ராணி எலிசபெத்
ராணி எலிசபெத்

ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள்: ராணியின் முகத்துடன் 4.5 பில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மொத்த மதிப்பு பவுண்டுகளில் 80 பில்லியன். இந்தத் தாள்களை புதிய மன்னரின் உருவப் படத்தைக் கொண்டு மாற்ற, சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிடிக்கும். நாணயங்களில் உள்ள ராணியின் படத்தையும் மாற்றியமைக்க வேண்டும். ராணியின் தலை பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கனடா, நியூசிலாந்து மற்றும் காமன்வெல்த்தின் பிற பகுதிகளிலும் புழக்கத்தில் உள்ளன.

தேசிய கீதம் மற்றும் ஜெபங்கள்: தேசிய கீதத்தில் உள்ள, ``God save our gracious Queen” என்ற வார்த்தையை மாற்றி ``God save our gracious King” என மாற்றம் செய்யப்படும். அதேபோல பொது வழிபாட்டில், ``எங்கள் ராணியும் ஆளுநருமான, உமது தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியருமான எலிசபெத்தின் இதயத்தை ஆளும்படி கடவுளிடம் கேட்கிறோம். அவள் எல்லாவற்றுக்கும் மேலாக உமது பெருமையையும் மகிமையையும் தேடுவாள்’’ என பொது ஆயர் கூட்டத்தில் ஜெபிக்கப்படுவதும் மாற்றம் பெறலாம்.

ராணி எலிசபெத்-
மன்னர் சார்லஸ்
ராணி எலிசபெத்- மன்னர் சார்லஸ்

அஞ்சல் பெட்டிகள்: ராணி எலிசபெத்தின் ராயல் சைஃபர், ER கொண்ட ராயல் மெயில் அஞ்சல் பெட்டிகள் அகற்றப்பட வாய்ப்பில்லை. ஏனெனில், கிங் ஜார்ஜ் VI இன் GR சைஃபர் கொண்ட சில அஞ்சல் பெட்டிகள் 70 ஆண்டுகளாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், தபால் அலுவலகம், புதிய மன்னரின் படத்தைப் பயன்படுத்தி முத்திரைகளை மாற்றும்.

காமன்வெல்த் மாற்றங்கள்: ராணி எலிசபெத் காமன்வெல்த் தலைவராக இருந்தார். அவரின் மரணத்துக்குப் பிறகு 54 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த்தின் தலைவர் பதவி, ராணியின் வாரிசுக்கு வழங்கப்படாது. ஆனால், காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களால் கூட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.