Published:Updated:

ஹிஜாப் விவகாரம்: ``இந்து ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்!" - அல் கொய்தா தலைவர் சாடல்

அல் கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி

அல் கொய்தா அமைப்பு நேற்று வெளியிட்ட வீடியோவில், ``இந்து ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் ஏமாற்றப்படுவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்" என அல் கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி பேசியுள்ளார்.

ஹிஜாப் விவகாரம்: ``இந்து ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்!" - அல் கொய்தா தலைவர் சாடல்

அல் கொய்தா அமைப்பு நேற்று வெளியிட்ட வீடியோவில், ``இந்து ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் ஏமாற்றப்படுவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்" என அல் கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி பேசியுள்ளார்.

Published:Updated:
அல் கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி

இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஹிஜாப் விவகாரத்தில், ``ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானது அல்ல" என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வர கர்நாடக அரசு தடைவிதித்தது. இருப்பினும், இன்னும்கூட பலரும் இதை ஏற்க மறுத்து போராடிவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இந்து கோயில்களில் முஸ்லிம்கள் கடை போடுவதற்கு எதிர்ப்பு, தற்போது ஹலால் விவகாரம் என முஸ்லிம்களுக்கு எதிராக கர்நாடகாவில் பிரச்னைகள் எழுந்துவருகின்றன.

ஹிஜாப் சர்ச்சை
ஹிஜாப் சர்ச்சை

இந்த நிலையில், அல் கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி இது தொடர்பாகப் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

அந்த வீடியோவில், ``இந்து ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் ஏமாற்றப்படுவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். ஆரம்பத்தில் இது, முஸ்லிம்களை ஒடுக்கும் ஒரு கருவியாக இருந்ததில்லை. ஆனால் எப்போது ஹிஜாபை தடை செய்ததோ, அப்போதே முஸ்லிம்களை ஒடுக்கும் ஓர் உண்மைக் கருவியாக மாறியிருப்பது அம்பலமாகியுள்ளது" என்று அந்த அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரி பேசியிருந்தார்.

மேலும் அந்த வீடியோவில், ஹிஜாப் சர்ச்சையின்போது கர்நாடகாவில் இந்து மாணவர்கள் முஸ்லிம் மாணவியை சூழ்ந்து கோஷமிட்டபோது, அவர்களை எதிர்த்து தனியாளாக கல்லூரிக்குச் சென்ற மாணவியை அல்-ஜவாஹிரி பாராட்டியிருந்தார்.

அல் கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவிவந்த நிலையில், இந்த வீடியோவை அல் கொய்தா வெளியிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. மேலும், 2021 செப்டம்பருக்குப் பிறகு தற்போதுதான் அல் கொய்தா அமைப்பிலிருந்து இது போன்று வீடியோ வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism