Published:Updated:

பழிக்குப் பழி தாக்குதல் - ‘அல்கொய்தா’ ஜவாஹிரியைக் குத்திக் கிழித்த ஹெல்ஃபயர்!

ஒசாமா பின் லேடனுடன் அய்மன் அல்-ஜவாஹிரி
பிரீமியம் ஸ்டோரி
ஒசாமா பின் லேடனுடன் அய்மன் அல்-ஜவாஹிரி

ஜூலை 31, அதிகாலை 6:18 மணி. வழக்கம்போல தொழுகையை முடித்துவிட்டு பால்கனியில் நின்றுகொண்டிருந் தார் ஜவாஹிரி.

பழிக்குப் பழி தாக்குதல் - ‘அல்கொய்தா’ ஜவாஹிரியைக் குத்திக் கிழித்த ஹெல்ஃபயர்!

ஜூலை 31, அதிகாலை 6:18 மணி. வழக்கம்போல தொழுகையை முடித்துவிட்டு பால்கனியில் நின்றுகொண்டிருந் தார் ஜவாஹிரி.

Published:Updated:
ஒசாமா பின் லேடனுடன் அய்மன் அல்-ஜவாஹிரி
பிரீமியம் ஸ்டோரி
ஒசாமா பின் லேடனுடன் அய்மன் அல்-ஜவாஹிரி

9/11 எனப்படும் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 மே மாதம் பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமா பின் லேடனை ரகசிய, துல்லியத் தாக்குதலின் மூலம் தீர்த்துக்கட்டியது அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம். தற்போது அதேபோல ஒரு துல்லியத் தாக்குதலை பத்தாண்டுகளுக்குப் பிறகு நடத்தி, அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியைக் கொன்று பழிதீர்த்திருக்கிறது ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம்!

ஒசாமா பின் லேடனுக்குப் பிறகு, அந்த அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார் அய்மன் அல்-ஜவாஹிரி. அமெரிக்காவால் தேடப்படும் 22 அதிபயங்கர முக்கியத் தீவிரவாதிகளின் பட்டியலில், ஒசாமாவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் இருந்த ஜவாஹிரிதான் இரட்டைக் கோபுரத் தாக்குதல் திட்டத்தில் மூளையாக இருந்து செயல்பட்டவர். தொடர்ந்து கென்யா, தான்சானியா, ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைத்தளங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியும், அதற்கு பதிலடியாக அமெரிக்கா நடத்திய தாக்குதலில் லாகவமாகத் தப்பியும் வந்தார். அவர் தலைக்கு அமெரிக்கா வைத்த விலை, இந்திய மதிப்பில் 250 கோடி!

பழிக்குப் பழி தாக்குதல் - ‘அல்கொய்தா’ ஜவாஹிரியைக் குத்திக் கிழித்த ஹெல்ஃபயர்!

இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், பாகிஸ்தான் எல்லையிலிருந்த ஜவாஹிரி, பாதுகாப்பாக ஆப்கன் தலைநகர் காபூல் அருகே ஷெர்பூரிலுள்ள ரகசிய இடத்துக்குத் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். இனி எந்த அச்சமும் இல்லை என அவரும், ஆப்கனில் இனி அமெரிக்காவுக்கு என்ன வேலை என உலகமும் எண்ணியிருந்த நிலையில்தான், அமெரிக்க ஏவுகணைகள் சத்தமில்லாமல் ஜவாஹிரியின் உடலைத் துளைத்துச் சென்றிருக்கின்றன.

ஜூலை 31, அதிகாலை 6:18 மணி. வழக்கம்போல தொழுகையை முடித்துவிட்டு பால்கனியில் நின்றுகொண்டிருந் தார் ஜவாஹிரி. இதே போன்ற காட்சியை ஏற்கெனவே தனது உளவு டிரோன்களால் பலமுறை உறுதிசெய்திருந்த அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., தாக்குதலுக்கான ஸ்கெட்சை மிகத் துல்லியமாகப் போட்டுவைத்திருந்தது. அவர் குடும்பத்தில் யாரொருவருக்கும் பாதிப்பு ஏற்படாதபடி, அச்சுப் பிசகாமல் ஜவாஹிரியின் உயிரை மட்டும் எடுக்க ஜூலை 25-ம் தேதி நடந்த ஜோ பைடன் தலைமையிலான கூட்டத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பால்கனியில் நின்றுகொண்டிருந்த ஜவாஹிரியை இலக்குவைத்துக் காத்திருந்தன, அமெரிக்க டிரோனில் இருந்த இரண்டு ஹெல்ஃபயர் (Hellfire R9X) ஏவுகணைகள். ஆறு மெல்லிய கத்திகள் அதன் முனையில் மூடியபடி இருக்கும். எய்யப்பட்டதும் வெடிச்சத்தம் ஏதுமின்றி இலக்கு வைக்கப்பட்ட நபரின் உடலில் பாய்ந்து, துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிடும் பிரத்யேகத்தன்மை பெற்றது ஹெல்ஃபயர். உத்தரவு வந்ததும், அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளும் ஜவாஹிரியின்மீது பாய்ந்து அவரை உருத்தெரியாமல் சிதறடித்துக் கொன்றன. அவர் நின்றிருந்த இடத்தின் ஜன்னல் உடைந்ததே தவிர, அந்த வீட்டுக்கும், வீட்டில் இருந்தவர்களுக்கும் சிறு சேதாரம்கூட ஏற்படவில்லையாம்.

பழிக்குப் பழி தாக்குதல் - ‘அல்கொய்தா’ ஜவாஹிரியைக் குத்திக் கிழித்த ஹெல்ஃபயர்!

மிகத் துல்லியமாகப் பழிக்குப் பழி வாங்கியிருக்கிறது அமெரிக்கா. ``எவ்வளவு ரகசியமான இடத்தில் பதுங்கி யிருந்தாலும், எத்தனை ஆண்டுகளானாலும், அமெரிக்க மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், உங்களைக் கொன்றுவிடுவோம்’’ என உணர்ச்சிவசப்பட்டுப் பேசி முடித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!