Published:Updated:

யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்; பலரைப் பிணைக் கைதிகளாக்கியதால் பதற்றம்!

யூத வழிபாட்டுத் தலம் ( Elias Valverde )

அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைத்த அந்த நபர், சிறையிலிருக்கும் ஆபிஃயா சித்திக் என்ற பெண்ணை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்; பலரைப் பிணைக் கைதிகளாக்கியதால் பதற்றம்!

அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைத்த அந்த நபர், சிறையிலிருக்கும் ஆபிஃயா சித்திக் என்ற பெண்ணை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

Published:Updated:
யூத வழிபாட்டுத் தலம் ( Elias Valverde )

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூத மத வழிப்பாட்டுத் தலம் ஒன்றில் நேற்றைய தினம் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த மதகுருமார்கள் உட்பட பலரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக்கினார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலத்தை போலீஸார் உடனடியாக சுற்றிவளைத்தனர். ஆனால், அந்த நபர் தான் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்திருப்பதாகவும், போலீஸார் உள்ளே வர முயற்சி செய்தால் பிணைக் கைதிகளாக இருப்பவர்களை சுட்டுக் கொலை விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

யூத வழிபாட்டுத் தலம்
யூத வழிபாட்டுத் தலம்
Elias Valverde

பின்னர், அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைத்த அந்த நபர், சிறையிலிருக்கும் ஆபிஃயா சித்திக் என்ற பெண்ணை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார். அந்த நபர் குறிப்பிட்ட ஆபிஃயா சித்திக் என்னும் பெண் பாகிஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானி ஆவார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்றதாகக் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, 86 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தப்பெண் இப்போது பெடரல் மருத்துவச் சிறையில் உள்ளார்.

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஸ்வாட் போலீஸ் அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, அந்த மர்ம நபர் பல மணி நேரத்துக்கு பின்னர், தான் பிணைக் கைதிகளாக வைத்திருந்த அனைவரையும் எந்த வித காயமுமின்றி விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் ஊடகங்ககள் தெரிவிக்கையில், ``துப்பாக்கியுடன் வழிபாட்டுத் தலத்தில் நுழைந்து அச்சுறுத்திய அந்த நபர், தற்போது அமெரிக்காவில் சிறையிலிருக்கும் பாகிஸ்தானின் பிரபல நரம்பியல் விஞ்ஞானி ஆபிஃயா சித்திக்கின் சகோதரர் என்று அரசு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அனைவரும் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டனர். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று தெரிவித்தன.

யூத வழிபாட்டுத் தலம்
யூத வழிபாட்டுத் தலம்
Elias Valverde

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், யூத மதகுரு ஜோசப் பொட்டாஷ்னிக் என்பவர் இது குறித்து கூறுகையில், ``இது வெறும் யூத மதத்துடன் நிற்காது. நாளை மற்ற மதத்தினருக்கும் நடக்கலாம். இந்த வன்முறை நிற்கப் போவதில்லை" என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், டெக்ஸாஸ் மாகாண அதிகாரிகள் பிணைக் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டதாகவும், துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல் விடுத்த அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism