Published:Updated:

``6,000 ரஷ்ய வீரர்களைக் கொன்றுவிட்டோம்..!" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் தாக்குதலை முடிந்தவரை எதிர்த்து உக்ரைனும் பதிலடி கொடுத்துவருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி...

``6,000 ரஷ்ய வீரர்களைக் கொன்றுவிட்டோம்..!" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

ரஷ்யாவின் தாக்குதலை முடிந்தவரை எதிர்த்து உக்ரைனும் பதிலடி கொடுத்துவருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி...

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தொடர்ந்து போரைத் தீவிரப்படுத்திவருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா தனது வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், உலக நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. ஆனாலும், ரஷ்யா எதற்கும் கவலைப்படாமல் போரைத் தீவிரப்படுத்திவருகிறது. இதனால், உக்ரைன் நாட்டிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அந்த நாட்டு அரசு முயன்றுவருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

நேற்றைய தினம் ரஷ்யா - உக்ரைன் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உக்ரைனின் மக்கள்தொகை அதிகம் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் பொருளாதார மண்டலமான கெர்சன் நகரைக் கைப்பற்றிவிட்டதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை முடிந்தவரை எதிர்த்து உக்ரைனும் பதிலடி கொடுத்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைன் -ரஷ்யா போர்
உக்ரைன் -ரஷ்யா போர்
ட்விட்டர்

இந்த மறு தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெல்ன்ஸ்கி, ``கடந்த ஆறு நாள்களாக நடந்துவரும் போரில் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism